ஆழ்கடல் மீனவர்களின் நகர்வைக் கண்காணிக்க படகுகளுக்கு செய்மதி கண்காணிப்பு
அத்துமீறிய மீன்படி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைய நாட்டிலுள்ள மீனவ படகுகளுக்கு செய்மதி கண்காணிப்பு கட்டமைப்பை பொருத்துவதற்காக டென்மார்க் நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிகப்படுகிறது.
செய்மதி கண்காணிப்பு கட்டமைப்பு தொடர்பான உடன்படிக்கையானது நேற்றைய தினம் கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் கைச்சாத்திடப்பட்டது.
இதற்கமைய, ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் 3 ஆயிரம் படகுகளுக்கு அடுத்த வருடம் இந்த தொழில்நுட்பத்தை பெற்றுக்கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மீனவ படகுகளுக்கு இந்த கண்காணிப்பு கட்டமைப்பை பொருத்துவதன் மூலம் அவற்றின் நகர்வினை கண்காணிக்க முடியும் எனவும் அமைச்சர இதன்போது தெரிவித்தார்.
ஆழ்கடல் மீனவர்களின் நகர்வைக் கண்காணிக்க படகுகளுக்கு செய்மதி கண்காணிப்பு
Reviewed by NEWMANNAR
on
November 13, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 13, 2014
Rating:


No comments:
Post a Comment