அண்மைய செய்திகள்

recent
-

கடத்தப்பட்ட இளைஞன் தப்பி வந்து பொலிஸில் சரண்


புசல்லாவை ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்திற்கு அருகில் கடந்த 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  வீதியால் சென்று கொண்டிருந்த இளைஞனை காரில் வந்த மூவர் தாக்கி கடத்திக்கொண்டு சென்றதை அவதானித்த பொதுமக்கள் சிலர் 119 இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து தேடுதலை மேற்கொண்ட பொலிஸார் அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு அரண்களுக்கும் தகவல் வழங்கினர்.
இன்று காலை கடத்தப்பட்ட இளைஞன் கடத்தல் காரர்களிடமிருந்து தப்பி வந்து புசல்லாவை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
புசல்லாவை ரொத்சைல்ட் தோட்டம் கிளன்லொக் பிரிவைச் சேர்ந்த 20 வயதுடைய ருவான் குமார ரஞ்சித் என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டவராவார். 

தன்னைக் கடத்தியமை தொடர்பில் குறித்த இளைஞன் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் நுவரெலியாவில் தனியார் முதலாளி  ஒருவரிடம் லொரி உதவியாளராக  தொழிலுக்கு சேர்ந்து ஒரு வாரமாகின்றது.

பின்னர் நான் ஒரு நாள் விடுமுறையில் வீட்டிற்கு வந்தேன். அப்போது அந்த முதலாளி எனக்கு தொலைபேசி மூலம் வேலைக்கு வரவில்லை என்று தகாத  வார்த்தைகளால் ஏசினார். எனக்கும் கோபம் வந்து விட்டது நானும் ஏசினேன். 

பின் அடுத்த நாள் 11 ஆம் திகதி காலையில் வேறு ஒருவரின் மூலம் எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு  புசல்லாவை நகரத்திற்கு வரச் சொன்னார். பின் 3 பேர் கொண்ட குழுவினர் என்னை தாக்கி  காரில் போட்டு கொண்டு சென்று விட்டனர். நாங்கள் பொலிஸில் சொல்லி விட்டுத்தான் வந்துள்ளோம். கத்த வேண்டாம், கத்தினால் கொலை செய்வோம். நீ எப்படி முதலாளியை போனில் ஏச முடியும் மன்னிப்புக் கேள் நாங்கள் கொலைக்கார்கள் எங்களிடம் எல்லா பலமும் இருக்கின்றது என்று கூறியவாறு அவர்களின் வீட்டிற்கு என்னை கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களின் உறவினர்கள் உட்பட அனைவரும் என்னைத் தாக்கினர். பின்னர் அதில் ஒருவர் நீ ஓடிப்போய் விடு இந்த பிரச்சினை குறித்து எங்கேயும் முறையிடக் கூடாது. அப்படி நடந்தால் உனக்கு ஆபத்து நாங்கள் நுவரெலியா சண்டியர்கள் என்று கூறி எச்சரித்தனர்.

நான் அவர்களிடமிருந்து தப்பி வந்து  புசல்லாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன் என்று பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் இளைஞனின் பெற்றோரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் தனது மகனுக்கு ஏற்பட்ட நிலைமைக்கு முறையான விசாரணை தேவை என்றும் தங்களது மகனின் உயிருக்கு ஆபத்து வராமல் பாதுகாத்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடத்தப்பட்ட இளைஞன் தப்பி வந்து பொலிஸில் சரண் Reviewed by NEWMANNAR on November 13, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.