அண்மைய செய்திகள்

recent
-

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித் தொகையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதேவேளை, மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களும் கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளன.

2015ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டமுன்மொழிவுகளுக்கு அமைய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித் தொகை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவங்கள் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உதவித் தொகையை பெற்றுக் கொள்வதற்கான தகைமைகள் மற்றும் பாடசாலைக்கு இணைத்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் மாகாண கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் Reviewed by NEWMANNAR on November 29, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.