எனக்கு எதிராக வெளியிடப்படும் பொய்யான செய்திகளுக்கு வன்மையான கண்டனத்ததைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஹுனைஸ் பாரூக் எம்.பி.
கடந்த சில மாதங்களாக “மக்கள் விசனம்” எனும் முகநூலிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் எனும் இணையத்தளங்களினூடாக எனக்குச் சேறு பூசப் படுகின்றது. குறித்த இணையதளங்கள் மற்றும் முகநூலை வாசிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும் இவற்றின் பின்னணியில் யார் இருந்து இதனைச் செயற்படுத்துகின்றார்கள் என்று விளங்கும்.
கடந்த காலங்களில் பதில் அளிக்கவில்லை என்பதற்காக நினைத்ததையெல்லாம் சொல்ல முடியுமா?
கடந்த காலமாக இந்த இட்டுக்கட்டல்கள் பொய்யான செய்திகளைக்கேட்டு மிகவும் மனம் வேதனையடைந்து அல்லாஹ்விடம் பாரப்படுத்தினேன். இன்னுமின்னும் பொய்யான தகவல்களைக் கூறி என்னை சமுதாயத்துக்கு பிழையாகக் காட்டலாம் என முயற்சிக்கின்றனர். என்னைப்பற்றி பிழையான முறையில், கட்சிமாறுவதற்கு கோடிகளுக்கு சோரம் போனதாக கூறுபவர்களுக்கு ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றேன்.
எதிர்கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு கட்சி மாறியபோது அவர்கள் எத்தனை கோடிகள் என்ன பதவிகளைப் பெற்றீர்கள் என கேட்பதோடு இவ்வாறு பொய்க்குற்றம் சுமத்துபவர்களுக்கு சவால் ஒன்றை விடுக்கின்றேன். உங்களது குற்றச் சாட்டுகள் அத்தனையும் பொய்யென்று அல்லாஹ்விடம் அழிவுச் சத்தியம் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்!. நீங்கள் தயாரா? என கேட்கிறேன். அத்துடன் உங்களால் எனக்கு எதிராகச் சுமத்தப்படும் குற்றச் சாட்டுக்களைச் சாட்சியுடன் நிரூபிக்க முடியுமா?
மேலும் எனக்கு எந்த பைல் உம் இல்லை என்பதை நான் உறுதியாகச் சொல்வேன் ஆனால் என்னைப் பற்றிப் பொய்க் குற்றம் சுமத்துபவர்கள் தாங்கள் களவில் காணி பிடித்தல், கள்ளக் கடத்தல் செய்யவில்லை, குடிபோதையால் இருக்கவுமில்லை, பெண்களை துஷ்பிரயோகம் செய்யவுமில்லை, முறைகேடாக பணம் சம்பாதிக்வுமில்லை, அரசியல் பழிவாங்கள்கள் யாருக்கும் செய்யவுமில்லை எவர் தொழிலுக்கும் மண் அள்ளிப்போடவுமில்லை, யாருடைய வயிற்றிலும் அடிக்கவுமில்லை என்பதையும் உறுதியிட்டுச் சொல்ல முடியுமா? ஆனால் என்னால் “அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள், அற்ப சொற்ப உலக வாழ்க்கையையும், பதவிகளையும் நம்பி மறுமையை மறந்து விடாதீர்கள்”.
மறுமை நாளில் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் முன்னிலையில் எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை நாடி நிச்சயம் நிற்பேன் என்பதைக் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன்.
நான் முதுகெலும்புள்ள அரசியல் வாதியாக முஸ்லிம்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக நான் களமிறங்கியிருக்கின்றேன். சமூகத்திற்காக அரசியல் செய்கிறேன் என சொல்பவர்கள் அது உண்மை என்றால் உங்கள் சுகபோகங்களை விட்டு விட்டு சமூகத்திற்காக அரசியல் செய்யத் தயாரா? இதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.
“ஒரு முஃமினான மனிதன், செய்யாத குற்றத்தை யார் அவர் மீது சுமத்துகின்றாறோ அவர்கள் பெரும் பாவத்தையும், இட்டுக் கட்டையும் சுமந்து கொண்டார்கள்”
(அல்குர்ஆன்: சூரா- அல்அஹ்ஸாப்,வசனம்-59)
எனக்கு எதிராக வெளியிடப்படும் பொய்யான செய்திகளுக்கு வன்மையான கண்டனத்ததைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஹுனைஸ் பாரூக் எம்.பி.
Reviewed by NEWMANNAR
on
November 29, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 29, 2014
Rating:


No comments:
Post a Comment