அண்மைய செய்திகள்

recent
-

மீரியபெத்த மண்சரிவு; மலையகத்தில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

கொஸ்லாந்தை மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவில் காணாமற்போனவர்களை தேடும் நடவடிக்கை இன்று எட்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மண் சரிவால் இடம்பெயர்ந்துள்ள மக்களை வேறு பகுதியில் தற்காலிகமாக குடியேற்றுவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு வருவதாக மத்திய பாதுகாப்பு படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை, கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மலையகத்தின் பல பகுதிகளிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

பொகவந்தலாவை கெம்பியன் நகரில் இன்று முற்பகல் கூடிய நூற்றுக்கணக்கான மக்கள் மண் சரிவால் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்துள்ளனர்.

அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்ததாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

இதேவேளை, சாமிமலை, தலவாக்கலை மற்றும் லிந்துலை பகுதிகளிலும் இன்று கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
மீரியபெத்த மண்சரிவு; மலையகத்தில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள் Reviewed by NEWMANNAR on November 05, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.