மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முசலி மக்களுக்கு ஹுனைஸ் பாரூக் எம்.பி நிவாரணம் வழங்க உடனடி ஏற்பாடு.
அண்மைக்காலமாக பெய்துவரும் கடும் மழை காராணமாக மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட காயாக்குழி கிராமத்திற்கு வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் நேற்று விஜயம் செய்து பார்வையிட்டார். அத்துடன் அனர்த்த நிவாராண சேவைகள் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு உரிய இடத்திற்கு அவர்களை வரவழைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு, குடிநீர் போன்ற உடனடி நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்தார்.
அத்துடன் நீர்மட்டம் அதிகரித்துள்ள கல்ஆறுவரை சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் கல்ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பால் தரைவழிப் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ள 6கிராமங்களான முள்ளிக்குளம், மறிச்சுக்கட்டி, கரடிக்குழி, ஹுனைஸ் நகர், பாலைக்குழி, மற்றும் சீனத் நகர் கிராம மக்களுக்கும் இந்த நிவாரணங்களை வழங்குவதற்கும் ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முசலி மக்களுக்கு ஹுனைஸ் பாரூக் எம்.பி நிவாரணம் வழங்க உடனடி ஏற்பாடு.
Reviewed by NEWMANNAR
on
November 04, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 04, 2014
Rating:
.jpg)

.jpg)

No comments:
Post a Comment