அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அரச பேரூந்து தரிப்பிட வீதித்தடையுடன் மோதிய முச்சக்கர வண்டி.-Photos

மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள வீதித்தடையில் (பெரியல்) மோதிய முச்சக்கர வண்டி பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ள சம்பவம் இன்று (28) வெள்ளிக்கிழமை காலை இடம் பெற்றது.

வேகமாக வந்த முச்சக்கர வண்டி மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தினுள் நுழைய முயன்ற போதே அரச பேரூந்து தரிப்பிட நுழைவாயிலில் அமைந்துள்ள வீதித்தடையில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த நபர் வீதித்தடையை(பெரியல்) அவதானிக்காமல் வேகமாக உள் நுழைய முயன்ற போதே குறித்த அனார்த்தம் இடம் பெற்றுள்ளது.

இதன் போது குறித்த முச்சக்கர வண்டி பலத்த சேதத்திற்கு உள்ளாகியதோடு போடப்பட்டிருந்த வீதித்தடை(பெரியல்) சேதமடைந்துள்ளது.

எனினும் முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த இளைஞர் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார்.

மேலதிக விசாரணைகளை மன்னார் வீதிப்போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





மன்னார் அரச பேரூந்து தரிப்பிட வீதித்தடையுடன் மோதிய முச்சக்கர வண்டி.-Photos Reviewed by NEWMANNAR on November 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.