அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தீவுப்பகுதியில் உள்ள பல கிராமங்கள் கடல் நீரில் மூழ்கியது- 1428 குடும்பங்கள் இடப்பெயர்வு.- Photos

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் கடல் நீர் உட் சென்றமையினால் இதுவரை 1428 குடும்பங்களைச் சேர்ந்த 5658 பேர் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் என்.ஏ.சி.முஹமட் றியாஸ் தெரிவித்தார்.

மன்னார் பிரிதேசச் செயலாளர் பிரிவில் 758 குடும்பங்களைச் சேர்ந்த 2903 பேரும்,நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேரும்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பரிவில் 658 குடும்பங்களைச் சேர்ந்த 2714 பேரூம் இவ்வாறு பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்துள்ளதாக ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் என்.ஏ.சி.முஹமட் றியாஸ் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று(28) வெள்ளிக்கிழமை காலை 5 மணியளவில் கடல் நீர் பல கிராமங்களுக்குள் உட் சென்றமையினால் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

உப்புக்குளம் தெற்கு கோந்தைப்பிட்டி கிராமத்தினுள் கடல் நீர் உட்சென்றமையினால் அக்கிராமத்தில் வசிக்கும் 45 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர்.

இக்கிராமம் கடல் நீரினால் மூழ்கியுள்ளது.இக்கிராம மக்கள் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி பள்ளி வாசலில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதே வேளை பள்ளிமுனை 41 வீட்டுத்திட்டம்,பள்ளிமுனை 49 வீட்டுத்திட்டம்,பள்ளிமுனை 50 வீட்டுத்திட்டம் ஆகிய கிராமங்களிலும் கடல் நீர் உற்சென்றமையினால் 140 குடும்பங்களைச் சேர்ந்த 600 பேர் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்துள்ளனர்.இந்த மக்கள் பள்ளிமுனையில் உள்ள பொது மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை சௌத்பார் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் கடல் நீர் உட்சென்றமையினால் 105 குடும்பங்களைச் சேர்ந்த 515 பேர் இடம் பெயர்ந்து சௌத்பார் பொது மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு உலர் உணவு பொருட்களை மன்னார் பிரதேசச் செயலகம் வழங்கி வருகின்றது.அதே வேளை ஜீவபுரம்,கிருஸ்ணபுரம்,சாந்திபுரம் ஆகிய கிராம மக்களும் இடம் பெயர்ந்துள்ளனர்.இதே வேளை தலைமன்னார் பியர்,எருக்கலம் பிட்டி மேற்கு கிராம மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை மன்னார் பிரதேசச் செயலாளர் கே.வசந்தகுமார்,வடமாகாண சபை உறுப்பினர் ஞானசீலன் குணசீலன்,மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொட்ரிகோ,மன்னார் நகர சபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,மன்னார் நகர சபை உறுப்பினர்களான இ.குமரேஸ்,மெரினஸ் பெரேரா,என்.நகுசீன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதே வேளை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் 120 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இடம் பெயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


















மன்னார் தீவுப்பகுதியில் உள்ள பல கிராமங்கள் கடல் நீரில் மூழ்கியது- 1428 குடும்பங்கள் இடப்பெயர்வு.- Photos Reviewed by NEWMANNAR on November 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.