புத்தளத்தில் பெருந்தொகை இறால்கள் பிடிபட்டன
த்தளம் கடற்கரை பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இறால் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கு எதிர்பாராத விதமாக பெரும் தொகையான இறால்கள் பிடிபட்டன.
சுமார் 15 வருடங்களுக்குப் பின்னர் இவ்வாறு அதிக இறால்கள் பிடிப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரையே பெருந் தொகையான இறால்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
இவை அதிக விலையில் விற்கப்பட்டிருந்த போதும் உள்ளுர் வர்த்தகர்கள் போட்டி போட்டுக் கொண்டு இறால்களை கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
புத்தளத்தில் பெருந்தொகை இறால்கள் பிடிபட்டன
Reviewed by NEWMANNAR
on
November 17, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 17, 2014
Rating:


No comments:
Post a Comment