சீனாவிலிருந்து அதி சொகுசு வாய்ந்த 500 பஸ்கள் இறக்குமதி!
சீனாவிலிருந்து அதி சொகுசு வாய்ந்த பஸ்கள் இறக்குமதி செய்வதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் அத்தியட்சகர் எச்.எம்.சந்திரசிறி தெரிவித்தார்.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பஸ்களில் 300 பஸ்கள் கொழும்பு நகரில் சேவைக்கமர்த்தப்படும்.ஏனைய பஸ்கள் கொழும்பை சூழவுள்ள பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இதேவேளை, இந்தியாவிலிருந்து 2200 பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. அவற்றில் 1200 பஸ்கள் தற்சமயம் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 900 பஸ்கள் தற்சமயம் நாடுமுழுவதிலும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவிக்கின்றது.
சீனாவிலிருந்து அதி சொகுசு வாய்ந்த 500 பஸ்கள் இறக்குமதி!
Reviewed by NEWMANNAR
on
November 30, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 30, 2014
Rating:


No comments:
Post a Comment