அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற உலக நீரிழிவு தினத்தை ஒட்டிய விழிப்புணர்வு ஊர்வலம். -Photo



உலக நீரிழிவு தினமான இன்று வெள்ளிக்கிழமை மன்னாரிலும் நீரிழிவு நோய் தொடர்பான விழிர்ப்புணர்வு ஊர்வலம் இடம் பெற்றது.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய் தடுப்புப்பிரிவின் ஏற்பாட்டில்,தொற்றா நோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் அன்ரன் சிசில் தலைமையில் குறித்த விழிர்ப்புணர்வு ஊர்வலம் இடம் பெற்றது.

மன்னார்-தாழ்வுபாடு பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் குறித்த ஊர்வலம் ஆரம்பமானது.

குறித்த ஊர்வலம் வைத்திய சாலை வீதியூடாக சென்று மன்னார் பொலிஸ் நிலைய வீதியை சென்றடைந்து பின் அங்கிருந்து மன்னார் பஸார் பகுதியூடாக சென்று மீண்டும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினை சென்றடைந்தது.

குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மன்னார் பொது வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் வி.ஆர்.சி.லெம்பேட்,வைத்தியர்கள்,பொது சுகாதார பரிசோதகர்கள், வைத்திய மாதுக்கள்,தாதியர்கள்,பாடசாலை மாணவர்கள் உட்பட பல நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த விழிர்ப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டு மக்களுக்கு நீரிழிவு நோய் தொடர்பில் விழிப்பூட்டும் பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.













மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற உலக நீரிழிவு தினத்தை ஒட்டிய விழிப்புணர்வு ஊர்வலம். -Photo Reviewed by NEWMANNAR on November 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.