திருகோணமலையில் குழியில் விழுந்து இரு குழந்தைகள் மரணம்
திருகோணமலை வெருகல் இலங்கை துறைமுகத்துவாரம் பகுதியில் குழி ஒன்றினுள் விழுந்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
இரண்டு வயதான பெண் குழந்தை ஒன்றும், இரண்டரை வயதான ஆண் குழந்தை ஒன்றுமே குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகள் இருவரும் வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது சுமார் மூன்று அடி ஆழமுள்ள குழிக்குள் காலை எட்டு மணியளவில் விழுந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குழியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளின் சடலங்கள் ஈச்சிலம்பற்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
திருகோணமலையில் குழியில் விழுந்து இரு குழந்தைகள் மரணம்
Reviewed by NEWMANNAR
on
November 27, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 27, 2014
Rating:


No comments:
Post a Comment