அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற நாவலர் விழா-Photos


மன்னார் மாவட்ட அறநெறிப்பாடசாலைகளின் இணையம் ஏற்ப்hடு செய்திருந்த நாவலர் இன்று(29-11-2014) சனிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில் மன்னார் மாவட்ட அறநெறிப்பாடசாலைகளின் இணையத்தின் தலைவர், சிவசிறி மஹா. தர்மகுமாரக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பிரதம விருந்தினராக, வவுனியா தமிழ்ச்சங்கத்தின் ஸ்தாபகரும் செயலாளருமாகிய தமிழ்மாமணி, தமிழருவி த.சிவகுமாரன் கலந்துகொண்டார்.கௌரவ விருந்தினராக ஜனாதிபதியின் இந்து சமய விவகாரங்களுக்கான இணைப்பாளர் கரிச்சந்திர பாபு சர்மா குருக்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக, மன்னார் பிரதேசச் செயலர் கே.எஸ்.வசந்தகுமார், மன்னார் உதவி மாவட்டச் செயலாளர் வி.பவாகரன் ,மன்னார் வண்ணாமோட்டை அ.த.க.பாடசாலை அதிபர் ஆ.பிரகலாதன், மன்னார் மோட்டக்கடை அ.த.க.பாடசாலை அதிபர் ஜெ.விஜயகுமார், மன்னார் இலுப்பக்கடவை மகா வித்தியாலய அதிபர் த.கோகிலராஜா ஆகியோரும் கலந்துசிறப்பித்தனர்.


ஆரம்பத்தில் பாடசாலை வளாகத்தினுள் அமைக்கப்பட்ட நாவலர் திருவுருவச் சிலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து சிறப்பு நடனங்கள், 'நல்லைநகர் நாவலர் பிறந்திலரேல்' என்னும் தலைப்பில், வெ.பொ.மாணிக்கவாசகர் தலைமையில் கவியரங்கு இடம் பெற்றது.

சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிவரும் ஒரு பெரியாருக்கு 'நாவலர் விருது' வழங்கல், இறைபணியாளர் விருது வழங்கல், மன்னார் மாவட்ட சிவபூமி இந்து இளஞர் மன்றத்தினரால் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் கௌரவிக்கப்படுதல் என்பனவும் இடம்பெறன.குறித்த நிகழ்வில் பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

















மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற நாவலர் விழா-Photos Reviewed by NEWMANNAR on November 29, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.