அண்மைய செய்திகள்

recent
-

காதலரைக் கரம் பிடித்தார் நடிகை பத்மப்ரியா

அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் தனது காதலர் ஜாஸ்மின் என்பவரை, நடிகை பத்மப்ரியா இன்று திருமணம் செய்துகொண்டார்.
மும்பையில் இருவீட்டார் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்தத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தமிழ்த் திரையுலகில் 'தவமாய் தவமிருந்து' படத்தின் மூலம் அறிமுகமானவர் பத்மப்ரியா. அதற்கு பிறகு 'பட்டியல்', 'சத்தம் போடாதே', 'மிருகம்', 'பொக்கிஷம்', 'இரும்புக் குதிரை முரட்டு சிங்கம்' மற்றும் 'தங்க மீன்கள்' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக 'பிரம்மன்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

தமிழ்ப் படங்கள் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி ஆகிய மொழிகளிலும் நாயகியாக நடித்திருக்கிறார். 'மிருகம்' படத்தில் நடித்ததிற்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தனது நீண்டநாள் காதலரான ஜாஸ்மின் என்பவரை மும்பையில் இன்று பத்மப்ரியா திருமணம் செய்துகொண்டார். இதில், இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.

இருவருமே நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மாஸ்டர் டிகிரி படித்தபோது அறிமுகமாகி பின்பு காதலர்களாக வலம் வந்திருக்கிறார்கள். மணமகன் ஜாஸ்மின் ஐஐடியில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்துவிட்டு, அமெரிக்காவில் பொது நிர்வாகம் பற்றிய படிப்பில் மாஸ்டர் டிகிரி பெற்றிருக்கிறார். அமெரிக்காவில் தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
காதலரைக் கரம் பிடித்தார் நடிகை பத்மப்ரியா Reviewed by NEWMANNAR on November 12, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.