அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை அகதிகளை பலவந்தமாக திருப்பி அழைக்கப் போவதில்லை: இலங்கையில் விக்னேஸ்வரன்


இந்தியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்ட வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று மாலை நாடு திரும்பியுள்ளார்.
இதனிடையே நாடு திரும்பிய முதலமைச்சர் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் தெரிவித்ததாவது,

இந்தியாவில் அகதிகளாகத் தங்கியுள்ளவர்கள், தாயகம் திரும்ப வேண்டும் என்று மீண்டும் அழைப்பு விடுத்துள்ள போதிலும், தாம் பலவந்தமாக அவர்களை திருப்பி அழைக்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

"போர்ச்சூழல் காரணமாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களின் மீள்குடியேற்றத்திற்காக இந்திய, இலங்கை அரசுகளுடன் வடக்கு மாகாணசபையும் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது. இதுதொடர்பாக, இந்தியாவுடன் வடக்கு மாகாணசபை ஆலோசனை நடத்தி வருகிறது என்றார்.

தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள மக்களின் நிலங்கள் சிங்களக் குடியேற்றங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அவர்கள் தாயகம் திரும்ப வேண்டியது முக்கியமானது. இருப்பினும் அவர்கள் சொந்த இடங்களுக்கு, நம்பிக்கையோடு திரும்பி வருவதற்குரிய சூழல் உருவாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும் அவர்கள் எவரையும் பலாத்காரமாக நாடு திரும்பச் செய்யப் போவதில்லை. அதேநேரம், வடக்கு மாகாணசபை செயற்படத் தொடங்கியதன் பின்னரே, 13 வது திருத்தச்சட்டத்தில் உள்ள பல குறைபாடுகள் தெரியவந்திருக்கிறது.

தமிழ்மக்களின் சார்பில் இலங்கை - இந்திய உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள இந்திய அரசு, தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அதிகாரங்களுடன் வாழத்தக்க வகையில் அந்தத் திருத்தச் சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு மேற்கொண்ட பயணம் அரசியல் சார்ந்ததல்ல. அதனால், அங்குள்ள அரசியல்வாதிகளையோ அரசு சார்ந்த அதிகாரிகளையோ நான் சந்திக்கவில்லை" என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை அகதிகளை பலவந்தமாக திருப்பி அழைக்கப் போவதில்லை: இலங்கையில் விக்னேஸ்வரன் Reviewed by NEWMANNAR on November 12, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.