அண்மைய செய்திகள்

recent
-

முக்கொலை சந்தேகநபர் தற்கொலை முயற்சி


யாழ். அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் முக்கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொ.தனஞ்சயன் வெள்ளிக்கிழமை (14) தற்கொலை முயற்சி செய்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெஞ்சுவலி காரணமாக சிறைச்சாலை அலுவலர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனஞ்செயன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது, அவர் அதிக மருந்து உட்கொண்டமை தெரியவந்ததுள்ளது.

இதனையடுத்து, சிகிச்சையளிக்கப்பட்டு தனஞ்செயன் தற்போது அவசர சிகிச்சைப்பிரிவிலிருந்து விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அச்சுவேலி காதிரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் ஆகிய மூவரை வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து இக்கொலைகளுடன் தொடர்புடையவர் என்று படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தர்மிகாவின் கணவரான பொ.தனஞ்செயன் ஊரெழு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

தர்மிகாவின் சகோதரியும் இந்த வாள்வெட்டில் பலியாகியிருந்தவருமான மதுசாவை இரண்டாவதாகத் திருமணம் செய்ய முடியாத நிலையிலே குறித்த நபர் (தர்மிகாவின் கணவர்) மேற்படி படுகொலையினைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முக்கொலை சந்தேகநபர் தற்கொலை முயற்சி Reviewed by NEWMANNAR on November 15, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.