அண்மைய செய்திகள்

recent
-

திருமணமாகி 1 1/2 மாதங்களில் நடு வானில் விமானிக்கு நடந்த சோகக் கதை-Video

இறந்த பைலட் திருமணம் ஆகி 1 1/2 மாதங்கள் இவர் அமைச்சர் மஹிந்தானந்த உறவினர் மனைவி மகள் என்பது குறிப்பிடத் தக்கது
7078 இலக்க விமானத்தில் இறந்த விமான பைலட், படை தலைவர் யுடிநலறயசனாயயெ வசந்த ஆகியவர்கள்

குருநாகலை வசிப்பிடமாகக் கொண்ட அவர் ராயல் காலேஜ் பழைய மாணவர் என்பது குறிப்பிடத் தக்கது.

அக்டோபர் 30இ கடந்த 2014 அன்று விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் உறவினர் மகளை மனம் முடித்ததும் குறிப்பிடத் தக்கது.

அத்துருகிரியவில் இன்று(12/12/2014) காலை அன்ரனோவ் விமான விபத்து! நால்வர் பலி! மூன்று வீடுகள் சேதம்

கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய ஹோகந்தரவில் விமானமொன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து தொடர்பான தகவலை சிவில் விமான சேவைகள் கட்டுப்பாட்டுத் திணைக்களம் உறுதி செய்துள்ளது.

அன்ரனோவ் 32 ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விமான விபத்து காரணமாக இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. 6.20 மணியளவில் ஹோகந்தர கத்தரீன் பார்க் பகுதியில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விமானத்தில் நால்வர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தற்போது பொலிஸாரும் மீட்புப் பணியாளர்களும் இணைந்து காயமடைந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அன்டனோவ் 32 ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது

அன்டனோவ் 32 ரக விமானமொன்றே அத்துருகிரிய ஹோகந்தர பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 5.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். ஹோகந்தர கத்தரின் பார்க் பகுதியில் விமான விபத்து காரணமாக பாரிய சுவாலைகளுடன் தீப்பற்றிக் கொண்டுள்ளது.

தீயைக் கட்டு;ப்பாட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்கவிலிருந்து ரத்மலானை நோக்கிப் பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் நான்கு பேர் பயணித்துள்ளனர்.

ஹோகந்தரவில் இடம்பெற்ற விமான விபத்தில் 4 பேர் பலி

ஹோகந்தரவில் இடம்பெற்ற விமான விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று காலை 6.20 அளவில் அத்துருகிரிய ஹோகந்தர பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அன்டனோவ்32 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. கட்டுநாயக்கவிலிருந்து ரத்மலானை நோக்கிப் பயணித்த விமானத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததாக விமான்படையினர் தெரிவித்தனர்.

விமான விபத்து காரணமாக மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளனர். விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.






திருமணமாகி 1 1/2 மாதங்களில் நடு வானில் விமானிக்கு நடந்த சோகக் கதை-Video Reviewed by NEWMANNAR on December 13, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.