சீரற்ற கால நிலை காரணமாக 10 பேர் பலி : 1இலட்சத்து 61 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக 6 மாகாணங்களில் 16 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வாரத்துக்குள் மட்டும் வெள்ளப் பெருக்கு, மண்சரிவு ஆகிய அனர்த்தங்களினாலேயே இந்த 10 பேரும் உயிரிழந்துள்ளதுடன் நேற்று மாலை ஆகும் போது 5 இலட்சத்து 74 ஆயிரத்து 495 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன் 3227 வீடுகள் முற்றாகவும் 10587 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்து ள்ளன. வெள்ள அனர்த்தம் அல்லது நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஏற்பட்ட மரணங்கள் 8 உம் மண்சரிவால் ஏற்பட்ட மரணங் கள் இரண்டும் நேற்று மாலைவரை பதிவா கியிருந்தன.
வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாண த்துக்கே அதிகளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவ ட்டத்தின் கோறளைப் பற்று மற்றும் கோற ளைப்பற்று தெற்கு ஆகிய பிரதேச செய லாளர் பிரிவுகளில் தலா ஒரு உயிரிழப்புக்களும், மட்டக்களப்பு பிரதேசத்தின் வீச்சுக் கல்முனை பிரதேச விமானப்படை முகாமை அண்மித்த பகுதியில் ஒரு மரண மும், அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்தில் ஒரு மரணமும் திருகோண மலை மாவட்டத்தின் மூதூர், கேர்ணிக்காடு பிரதேசத்தில் ஒரு மரணமும் பதிவாகியுள் ளன. அதன்படி கிழக்கு மாகாணத்தில் மட் டும் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் எம்பிலிபிட்டிய, மகபெலஸ்ஸ பிரதேசத்தில் சப்பாத்து பாலத்தின் ஊடாக கரையை அடைய முயற்சித்த மூன்று பெண்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இதனால் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.
இதேவேளை நேற்று முன் தினம் மலை யகத்தின் மினிப்பே பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்ததாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க ரணவீர தெரிவித்தார். இதனுடன் சேர்த்தே சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை இந்தவாரம் 10 பேரை எட்டியுள்ளது.
அத்துடன் அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் வெள்ளம் காரணமாக நபர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் வவுனியா பிரதேசத்திலும் ஒருவர் காயமடைந் துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.
இதேவேளை நேற்று முன்தினம் தமண பிரதேசத்தில் தாயொருவர் தனது மூன்று வயதான குழந்தை, மற்றும் இருவருடன் பயணித்துக் கொண்டிருந்த போது பாரிய நீரோட்டம் ஒன்றினால் அடித்துச் செல்லப் பட்டுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட இந்த பாரிய நீரோட்டத்தில் சிக்கி 100 மீற்றர்கள் வரை அடித்துச் செல்லப்ப ட்ட இவர்கள் நால்வரும் தமணை பொலி ஸாரின் நடவடிக்கை காரணமாக மீட் கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இவர்கள் நால்வருக்கும் எவ்வித பாதிப்புக் களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
இதனை விட நேற்று மாலை ஆகும் போது பாதிக்கப்பட்டிருந்த 574495 பேரில் 21439 குடும்பங்களை சேர்ந்த 75489 பேர் 299 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான உலர் உணவுகளை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் ஊடாக வழங்கிவருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் சரத் லால் குமார குறிப்பிட்டார்.
வடக்கின் யாழ்ப்பாணம்,வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு,மன்னார் மாவட்டங்களும், கிழக்கின் திருகோணமலை, மட்ட க்களப்பு, அம்பாறை மாவட்டங்களும் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களும், வட மேல் மாகாணத்தின் குருணாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களும் மத்திய மாகாணத் தின் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களும் சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலையிலும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெரு க்கினாலும் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டம் மண்சரிவு அச்சுறுத்தலாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.
இந்த அடைமழை காரணமாக ஏற்பட்டு ள்ள வெள்ளத்தினால் கிழக்கிற்கே அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
கிழக்கு நிலைவரம்
கிழக்கை பொறுத்தவரை நேற்றும் அடை மழையுடன் கூடிய கால நிலை நீடித்தது.இதனால் வெள்ளம் காரணமாக திருகோணமலையில் 11555 குடும்பங்களைச் சேர்ந்த 36238 பேரும் மட்டக்களப்பில் 117762 குடு ம்பங்களை சேர்ந்த 421702 பேரும் அம்பாறையில் 8062 குடும்பங்களை சேர்ந்த 28797 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கை பொறுத்தவரை மொத்தமாக 486737 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 14406 குடும்பங்களை சேர்ந்த 50493 பேர் 141 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக கிழக்கில் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை கிழக்கில் 3106 வீடுகள் முற் றாகவும் 6541 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது. கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான விளை நில ங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் அந்த மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. சுமார் 50 ஏக்கர் விளை நிலம் இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
அனுராதபுரம்
அனுராதபுரம் மாவட்டத்தில் அதிகமான பகுதி நீரில் மூழ்கியுள்ள நிலையில் அந்த நகரத்தின் வழமையான நடவடிக்கைகள் நேற்று ஓரளவு வழமைக்கு திரும்பியிருந்தன.
அத்துடன் திஸ்ஸமஹராம உள்ளிட்ட அனுராதபுர குளங்கள் நிரம்பி வழியும் நிலை யில் தொடர்ந்தும் மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்து அந்த ஆறு பெருக்கெடுத் துள்ளது.
அனுராதபுரம் பிரதேசத்தில் 6224 குடும்பங்களை சேர்ந்த 20884பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கு ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிட்ட அனர்த்த முகாமைத்துவ மத் திய நிலையம் பாதிக்கப்பட்டவர்களில் 908 குடும்பங்களை சேர்ந்த 3000 பேர் 26 நலன் புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்ட னர்.
பொலன்னறுவை
பொலன்னறுவை மாவட்டத்திலும் வெள் ள அச்சுறுத்தல் தொடர்கின்றது. பொலன்னறுவையை பொறுத்தவரை அங்கு பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளதாகவும் இதனால் பல குளங்களின் வான் கதவுகள் நேற்றும் திறக்கப்பட்டிருந்ததாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்தது.பொலன்னறுவை மாவட்டத்தை பொறுத்தவரை 3579 குடும்பங்களை சேர்ந்த 142571 பேர் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப் பட்டுள்ளனர். இப்பிரதேசத்தின் ஊடான போக்கு வரத்து பெரும்பாலும் தடை பட்டு ள்ள நிலையில் மகாபராக்கிரமபாகு, கவுடுல வாவி, மின்னேரிய குளம், ஆகியனவும் பெருக்கெடுத்துள்ளன. இதன் காரணமாக ஆயிரக் கணக்கான பயிர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வடக்கு நிலைவரம்
இதேவேளை நிலவும் சீரற்ற கால நிலை யால் வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத் தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் பாதிப்புக்களை சந்தித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் 4656 பேரும் வவுனியாவில் 5494 பேரும், கிளிநொச்சி யில் 10781 பேரும், முல்லை தீவில் 2044 பேரும் மன்னாரில் 6573 பேரும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது. இதனை விட வடக்கில் 34 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 2725 வீடுகள் பகுதியளவான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளன.
மலையகம்
மலையகப் பகுதியில் மாத்தளை, கண்டி, மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்க ளில் தொடர்ந்தும் அடைமழை பெய்து வரும் நிலையில் வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது. மாத்தளையில் 531 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியாவில் 275 பேரும் கண்டியில் 273 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நேற்றும் மலையகத்தில் பெய்த அடை மழை காரணமாக பிரதேசங்கள் பலவற்றின தும் நீர் நிலைகள் நிரம்ப ஆரம்பித்துள்ளன.
இதனை விட கண்டி, மினிப்பேயில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மண் சரிவு கார ணமாக இரு மரணங்கள் பதிவாகின.அத்துடன் கண்டி, நுவரெலியாமற்றும் பதுளை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான மண் சரிவு அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் மட்டும் மண் சரிவு அச்சுறுத்தல் காரணமாக 102 குடும்பங்களை சேர்ந்த 361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Reviewed by NEWMANNAR
on
December 25, 2014
Rating:

No comments:
Post a Comment