மன்னாரில் தொடர் மழை 127 குடும்பம் தற்போது வரை இடப்பெயர்வு.
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கினால் பாதீக்கப்பட்டு இடம் பெயர்ந்துள்ள மக்களை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் இன்று(20) சனிக்கிழமை காலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதோடு அந்த மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை மேற்கொள்ளுமாறு உரிய பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த வகையில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மன்னார் தீவுப்பகுதியைச் சேர்ந்த எமிழ் நகர்,சௌத்பார்,சாந்திபுரம் , ஜீவபுரம் ஆகிய கிராமங்கள் மற்றும் தலைமன்னார் ஸ்ரேசன் கட்டுக்காரன் குடியிறுப்பு,துள்ளுக்குடியிறுப்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதீப்படைந்து இடம் பெயர்ந்துள்ளனர்.
இக்கிராம மக்கள் தற்போது இடம் பெயர்ந்து பாடசாலை,ஆலயம்,பொது மண்டபங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தலைமன்னார் ஸ்ரேசன்,கட்டுக்காரன் குடியிறுப்பு,துள்ளுக்குடியிறுப்பு ஆகிய மூன்று கிராம அலுவலகர் பிரிவுக்குற்பட்ட 5 கிராமங்களைச் சேர்ந்த 127 குடும்பங்களைச் சேர்ந்த 472 பேர் பாதீக்கப்பட்டு இடம் பெயர்ந்துள்ளதாக மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்த குமார் தெரிவித்தார்.
இவர்களுக்கான மூன்று நாட்களுக்கான உணவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மன்னார் பிரதேசச் செயலகம் மேற்கொண்டு வருவதாக மன்னார் பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலர்களுக்கான நிர்வாக அலுவலகர் ராதா பெணாண்டோ தெரிவித்தார்.
இதே வேளை நானாட்டான்,மாந்தை மேற்கு,முசலி ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளிலும் மழை காராணமாக பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள திடீர் அனார்த்தம் தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அனார்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் மற்றும் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதோடு மல்வத்து ஓயா பெறுக்கொடுத்துள்ளதன் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
December 21, 2014
Rating:
No comments:
Post a Comment