மல்வத்து ஓயா பெருக்கெடுப்பு-தம்பனைக்குளம் கிராமம் வெள்ள நீரில் மூழ்கியது-மன்னார்மாவட்டத்தில் இது வரை 1357 குடும்பங்களைச் சேர்ந்த 4749 பேர் இடம் பெயர்வு.
மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக மன்னார் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட தம்பனைக்குளம் கிராமம் வெள்ள நீரில் முழ்கியுள்ளதாகவும்,குறித்த கிராமத்தில் உள்ள மக்கள் தற்போது பண்டிவிருச்சான் ம.வி பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முஹமட் றியாஸ் தெரிவித்துள்ளார்.
மல்வத்து ஓயாவின் நீர் மட்டம் தற்போது 19 அடி வரை பாய்ந்து கொண்டிருக்கின்றது.இதனால் குஞ்சுக்குளம் கிராமத்திற்கான தரை வழிப்பாதையும் துண்டிக்கப்பட்டுள்ளது.பாதை முழுமையாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.அத்தோடு தம்பனைக்குளம் உற்பட அயல் கிராமங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இது வரை 1357 குடும்பங்களைச் சேர்ந்த 4749 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 472 குடும்பங்களைச் சேர்ந்த 1519 பேரும்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 120 குடும்பங்களைச் சேர்ந்த 497 பேரும்,மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 352 குடும்பங்களைச் சேர்ந்த 1188 பேரும்,நானாட்டான் பிரதேசச் செயலாளர் 403 குடும்பங்களைச் சேர்ந்த 1500 பேரும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேரும் இவ்வாறு இடம் பெயர்ந்துள்ளனர்.
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் நானாட்டான் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இடம் பெயர்ந்த மக்களை வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.தலைமன்னார் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.வெள்ள நீரை வெளியேற்ற மன்னார் பிரதேச சபையின் தலைவர் மாட்டீன் டயஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்தும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மல்வத்து ஓயா பெருக்கெடுப்பு-தம்பனைக்குளம் கிராமம் வெள்ள நீரில் மூழ்கியது-மன்னார்மாவட்டத்தில் இது வரை 1357 குடும்பங்களைச் சேர்ந்த 4749 பேர் இடம் பெயர்வு.
Reviewed by Admin
on
December 22, 2014
Rating:

No comments:
Post a Comment