மன்னார் எழுத்தூர் அம்பாள் ஆலயத்தில் திருட்டு-மன்னார் பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடு.Photos
மன்னார் எழுத்தூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை இரவு திருட்டுச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை காலை ஆலயம் திறக்கப்பட்ட போது திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளமை தெரிய வருகின்றது.ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள விக்கிரகங்கள் சேதப்படுத்தப்பட்டு யந்திரத்தகடுகள் திருடப்பட்டுள்ளது.
அதே போல் ஆலயத்தினுள் வைக்கப்பட்டுள்ள அம்மன் சிலை தகர்க்கப்பட்டு யந்திரத்தகடு திருடப்பட்டுள்ளதோடு அங்கு வைக்கப்பட்டிருந்த அம்மனின் பெறுமதி மிக்க நகைகளும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று திங்கட்கிழமை காலை குறித்த ஆலயத்திற்கு வந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற
மன்னார் எழுத்தூர் அம்பாள் ஆலயத்தில் திருட்டு-மன்னார் பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடு.Photos
Reviewed by Admin
on
December 22, 2014
Rating:

No comments:
Post a Comment