தமிழ் மக்களின் சிந்தனையுடன் செயற்பாடும் ஒரு நோக்கத்துக்கானதாக அமைய வேண்டும்-எஸ்.வினோ நோகராதலிங்கம்
பிரிட்டிஸ் காரரிடமிருந்து இந்த நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து நாட்டின் ஒரு பகுதியினரே அச்சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர்.அன்று தமிழ் மக்களுக்கும் சம சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தால் நமது தலைவர்கள் இன்று வரை போராடுவதற்கு தலைப்பட்டிருக்க மாட்டார்கள்.உரிமையோடு உயிர் வாழ்வதற்கு நாம் தொடர்ந்தும் போராடுவதை தவிர வேறு வழி நமக்கு இல்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
அண்மையில் பெய்த கடும் மழையின் காராணமாக பாதிக்கப்பட்ட வவுனியா விளக்கு வைத்த குளம்,மகிழங்குளம் ஆகிய கிராம மக்களுக்கு புலம் பெயர்ந்து ஜேர்மனில் வசிக்கும் தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர் தேவராஜா ரகு,மற்றும் வவுனியா வர்த்தக சங்கம்,கூட்டமைப்பின் ஆதரவாளர்களிள் நிதி உதவியில் பெற்றுக்கொள்ளப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் உரையாற்றுகையில்,,,,,
-வரப்போகின்ற தேர்தல்களும்,நாம் போடப்போகின்ற வாக்குகளும் கூட எமது போராட்டத்தின் ஓர் அங்கமும்,அதன் வடிவமும் தான்.தமிழ் மக்களின் சிந்தனையுடன் செயற்பாடும் ஒரு நோக்கத்துக்கானதாக அமைய வேண்டும்.கொஞ்சம் நிலை மாறினாலும் மீண்டெழுவது கடினமாகிவிடும்.ஒற்றுமையே தமிழர்களின் அரசியல் பலம் என்பதனை கடந்த காலங்களிலும் நாம் நிரூபித்துக்காட்டியிருக்கின்றோம்.
இறைவனும்,இயற்கையும் எம்மை மாறி மாறி சோதித்துக் கொண்டிருந்தாலும் மனம் தளராமல் எமது சுதந்திரத்தை நோக்கிய கடினமான பாதையின் பயணத்தை நாம் தொடர்ந்தாக வேண்டும்.வரப்போகின்ற தேர்தலில் வட கிழக்கு தமிழ் மக்களின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள தென்னிலங்கை கட்சிகளும்,சிங்கள மக்களும் அவசரப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
-உடல் ரீதியாக அவர்கள் தந்த வலிகள் போதாதென்று மன ரீதியாகவும்,வலிகள் தர காத்திருக்கின்றார்கள்.எல்லா வலிகளையும் தாங்கும் வல்லமை எமக்குண்டு என்பதையும் நாம் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
-கடந்த ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குப்பலம் வெற்றி தோல்வியை தீர்மானிக்கவில்லை.ஆனால் தமிழ் மக்களும்,தமிழ் தேசியக்கூட்டமைப்பும் எடுத்த முடிவுகள் வெற்றி தோல்வியை தீர்மானித்தன.
-தமிழ் மக்களும்,தமிழ் தேசியக்கூட்டமைப்பும் வௌ;வேறான முடிவுகளையோ,நிலைப்பாடுகளையோ கொண்டிருக்க முடியாது.ஒவ்வொறு நகர்வுகளையும் நாம் நிதானத்துடனும்,அவதானமாகவும் கையாள வேண்டியுள்ளது.தமிழ் மக்களின் கருத்துக்களை உள்வாங்கி அதன் பிரதிபலிப்புக்களை ஒரு மையத்துக்குள் கொண்டு வந்து சேர்ப்பதன் மூலம் தான் எம்மால் வெற்றி கொள்ள முடியும்.இதற்கு ஒற்றுமை அவசியம்.
-கடந்த கால ஆயுதம்,அரசியல் போராட்டங்களில் எமது தலைமைகள் வேறு வேறு சந்தர்ப்பங்களில் எடுத்த சில முடிவுகள் விமர்சனங்களுக்குள்ளாகி வந்தமையை நாம் அனுபவங்களாக கொள்ள வேண்டும்.
-தமிழ் மக்களின் கருத்துக்களுக்கும்,உணர்வுகளுக்கும் பாதகமில்லாமல் அவற்றை உள்வாங்கி சரியான நேரத்தில் சரியான முடிவுகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை எடுக்கும் வரை எமது மக்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.என தெரிவித்தார்.குறித்த நிகழ்வில் வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து,கிராமிய அபிவிருத்தி அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் செ.மயூரனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களின் சிந்தனையுடன் செயற்பாடும் ஒரு நோக்கத்துக்கானதாக அமைய வேண்டும்-எஸ்.வினோ நோகராதலிங்கம்
Reviewed by NEWMANNAR
on
December 10, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment