இராதாகிருஷ்ணன் மற்றும் திகாம்பரம் ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு
பிரதியமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்துள்ள வீ.இராதாகிருஷ்ணன் மற்றும் பி.திகாம்பரம் ஆகியோர், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் கலந்துகொண்டு, கருத்து வெளியிட்டுள்ளனர்.
மலையக மக்களின் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் காலங்களில் சிறந்த தீர்வு வழங்குதே தமது நோக்கமெனவும் வீ.இராதாகிருஷ்ணன் மற்றும் பி.திகாம்பரம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இராதாகிருஷ்ணன் மற்றும் திகாம்பரம் ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு
Reviewed by NEWMANNAR
on
December 10, 2014
Rating:

No comments:
Post a Comment