வாக்காளர் அட்டைகளை எதிர்வரும் 20 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் கையளிக்க நடவடிக்கை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை எதிர்வரும் 20 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் கையளிக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி 20 ஆம் திகதியிலிருந்து வாக்காளர் அட்டைகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாச தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 31 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கை முன்னெடுக்ககப்படவுள்ளது.
டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் கிடைக்க பெறாதவர்கள் அருகில் உள்ள தபாலகங்களுக்கு சென்று தமது அடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என மேலதிக தேர்தல்க்ள ஆணையாளர் தெரிவித்துள்ளார்
இதேவேளை தபால் மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படும் எனவும் மேலதிக தேர்தல்க்ள ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 6 இலட்சம் வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
வாக்காளர் அட்டைகளை எதிர்வரும் 20 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் கையளிக்க நடவடிக்கை
Reviewed by NEWMANNAR
on
December 10, 2014
Rating:

No comments:
Post a Comment