கி. நகுலேஸ்வரன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கிராம அலுவலகர் உள்ளிட்ட 07 பேரை தொடர்ந்தும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி.
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் உள்ள ஈசன் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னால் உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று புதன் கிழமை(10) மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்றது.
இதன் போது கைது செய்யப்பட்ட வெள்ளாங்குளம் கிராம சேவகர் உட்பட 07 சந்தேக நபர்களையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மன்றில் ஆஜர் படுத்தினர்.
குறித்த 07 சந்தேக நபர்களையும் தொடர்ந்து 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என மன்றில் பயங்கர வாத தடுப்பு பிரிவினர் அனுமதி கோரினர்.
அதற்கமைவாக குறித்த 07 சந்தேக நபர்களையும் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரனைகளை மேற்கொள்ள மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் அனுமதி வழங்கினார்.
குறித்த காலம் முடிந்தவுடன் மன்னார் நீதிமன்றத்தில் குறித்த 07 சந்தேக நபர்களையும் ஆஜர் படுத்துமாறு மன்னார் நீதவான் பயங்கர வாத தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டார்;.
இதே வேளை கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனின் மரணம் தொடர்பான மரண விசாரனை இன்று புதன் கிழமை மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்றது.இதன் போது அவரது மனைவி மன்றில் சாட்சியமளித்தார்.
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் உள்ள ஈசன் குடியிறுப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த தமிழீழ காவல் துறையின் முன்னால் உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது-40) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தை கடந்த மாதம் 12 ஆம் திகதி புதன் கிழமை இரவு 8.30 மணியளவில் அவருடைய வீட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவரது கொலை தொடர்பில் பொலிஸார் மேற் கொண்ட தீவிர விசாரணைகளின் போது வெள்ளாங்குளம் கிராமத்திற்கு பொறுப்பான கிராம அலுவலகர் உட் பட அக்கிராமத்தைச் சேர்ந்த 7 பேரை கட்டம் கட்டமாக பொலிஸார் கைது செய்தனர்.
இதன் போது கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியினையும் பொலிஸார் கைப்பற்றிய நிலையில் குறித்த 07 சந்தேக நபர்களையும் பொலிஸார் மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.
கி. நகுலேஸ்வரன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கிராம அலுவலகர் உள்ளிட்ட 07 பேரை தொடர்ந்தும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி.
Reviewed by NEWMANNAR
on
December 10, 2014
Rating:

No comments:
Post a Comment