மன்னாரில் மும்மொழி அமுலாக்கல் தொடர்பாக மகஜர் கையளிப்பு-Photos
சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் மும்மொழி அமுலாக்கல் தொடர்பான மனுகையளிப்பு நிகழ்வு மன்னார் மாவட்ட மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட மொழிச்சங்கங்களின் ஒன்றியத்தினால் மன்னார் நகரசபை மற்றும் மன்னார் பிரதேச சபை தலைவர்களுக்கு இன்று புதன் கிழமை காலை மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,
தங்கள் நிர்வாக பிரதேசத்திற்குற்பட்ட பகுதிகளில் காணப்படும் அரச, தனியார், பொது நிலையங்களில் புதிதாக ஆரம்பிக்கப்படும் வியாபார நிலையங்களிற்கு இடப்படும் பெயர் பலகைகளில் மும்மொழிப் பயன்பாட்டினை மேற்கொள்ள ஆலோசனை வழங்குமாறு மிகப் பணிவான வேண்டுகோளினை தங்களிடம் முன்வைக்கின்றோம்.
இவ் வேண்டுகோளானது அரசகரும மொழிகள் ஆணைக்குழு விதந்துரைத்துள்ள 1991/8ம் இலக்க சட்டத்தின் அரசியல் அமைப்பின் VI ஆம் அத்தியாயத்தில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளை மேற்கோள் காட்டியே எம்மால் தங்கள் சமூகத்தில் பணிவாக இவ் வேண்டுகோள் முன்வைக்கப்படுகிறது என்பதை நாம் பிரகடணப்படுத்துகிறோம்.
அத்துடன் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் நிமிர்த்தம் தாங்கள் ஏற்படுத்தக்கூடிய துணை விதிகள் என்ற பிரமாணத்தில் எதிர்கால சமூக ஒற்றுமை மற்றும் ஒன்றுபட்ட பல்லினத் தேசியம் என்பதற்கு வலுவூட்டும்; தங்களுக்கு இவ் வேண்டுகோளை நடைமுறைப்படுத்துமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம். என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னாரில் மும்மொழி அமுலாக்கல் தொடர்பாக மகஜர் கையளிப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
December 10, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment