அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்,வவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை செல்வம்,வினோ எம்.பிகள் நேரில் சென்று பார்வை.-Photo

மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டதோடு அந்த மக்களுக்கு மேற்கொள்ள வேண்டிய அவசிய தேவைகள் குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையின் காரணமாக சௌத்பார்,சாந்திபுரம்,ஜிம்ரோன் நகர்,பள்ளிமுனை,விடத்தல் தீவு, மற்றும் வவுனியா மாவட்டத்தில் மகிழங்குளம்,விளக்கு வைத்த குளம் ஆகிய கிராம மக்கள் பாதி க்கப்பட்டு இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்த மக்களுக்கு போதிய அளவு உதவிகளை செய்ய அதிகாரிகள் முன்வரவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மன்னார் சௌத்பார் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கடல் நீர் உட்சென்றுள்ளமையினால் குறித்த வீடுகளில் உள்ள மலசல கூடங்கள் நிறைந்து அப்பகுதியில் சுகாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அந்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ள்னர்.

எனினும் இந்த மக்களுக்கு மூன்று நாட்களுக்கான உலர் உணவுகள் மாத்திரமே மன்னார் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் இனி வரும் நாட்களில் தாம் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைய ஏற்படும் என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை விடத்தல் தீவு கிராமத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் பொது மண்டபங்களிலும்,ஆலயங்களிலும் தங்கியுள்ளனர்.

அவர்களுக்கு ஒரு வாரத்திற்கான உலர் உணவுகளை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் வழங்கி வருகின்றார்.

எனினும் ஒரு சில தினங்களில் மீண்டும் வீடு செல்லும் தாம் பாதிக்கப்பட்ட தமது வீடுகளில் எவ்வித பிரச்சினைகளும் இன்றி குடியமர வேண்டிய ஏற்பாடுகளை மெற்கொண்டு தருமாறு அந்த மக்கள் பிரதேசச் செயலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது மழை காரணமாக நுளம்பின் பெருக்கம் அதிகரித்துள்ளமையினாலும் தாம் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அந்தமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.




















மன்னார்,வவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை செல்வம்,வினோ எம்.பிகள் நேரில் சென்று பார்வை.-Photo Reviewed by NEWMANNAR on December 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.