அண்மைய செய்திகள்

recent
-

48 மணிநேரத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவு: வெள்ளத்தில் மூழ்கியது மட்டக்களப்பு - Photo

மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் தொடர்ச்சியாக மழைபெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (21) 8.30 மணிவரையான 48 மணிநேர காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையப் பொறுப்பாளர் கே. சூரியகுமாரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களின்  குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நாவற்குடா, தாளங்குடா, காத்தான்குடி, ஆரையம்பதி, சித்தாண்டி, ஏறாவூர், செங்கலடி உள்ளிட்ட பல பகுதிகளும் மற்றும் மட்டக்களப்பு நகரின் மாமாங்கம், சின்ன ஊறணி, சின்ன உப்போடை, திசவீரசிங்கம் சதுக்கம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளதோடு வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.





48 மணிநேரத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவு: வெள்ளத்தில் மூழ்கியது மட்டக்களப்பு - Photo Reviewed by NEWMANNAR on December 21, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.