ஐரோப்பிய குடியுரிமை கொண்ட ஒருவரின் உறவினர் ஐரோப்பியக் குடியுரிமை அற்றவராக இருந்தாலும் பிரித்தானிய செல்ல விசா தேவையில்லை: ஐரோப்பிய நீதிமன்றம்
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையேயான மோதல்கள் தொடர்கின்றன. ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான உள்முரண்பாடுகளின் வெளிப்பாடே இது. ஐரோப்பியப் நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பு ஒன்று வெளிநாட்டு குடியேற்ற வாசிகளுக்கு சாதகமானதாக அமைந்துள்ளது. ஐரோப்பிய குடியுரிமை கொண்ட ஒருவரின் உறவினர் ஐரோப்பியக் குடியுரிமை அற்றவராக இருந்தாலும் பிரித்தானியாவிற்கு செல்வதற்கு அவருக்கு விசாவோ அன்றி குடும்ப அனுமதியோ தேவையில்லை என ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மக்காதி என்பவரின் மனைவி பிரித்தானியாவிற்குச் செல்வதற்கு ஆறுமாத குடும்ப அனுமதிபபத்திரத்தை பிரித்தானிய குடிவரவுத் திணைக்களம் கோரியது, அதனை எதிர்த்து ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் மக்காதி வழக்குத் தாக்கல் செய்த போதே இத்தீர்ப்பின் முழுமையையும் ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கியுள்ளது.
ஐயர்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய இரண்டு நாடுகளதும் குடியுரிமையைக் கொண்டிருக்கும் மக்காதி (McCarthy )என்பவரின் மனைவு கொலம்பிய நாட்டுப் பிரசையாவர். இவர்கள் இருவரும் ஸ்பானியாவில் வாழ்ந்து வருகின்றனர். திருமணமான போதும் மக்காதியின் மனைவி ஹெலேனா (Helena)தனது குடியுரிமையை மாற்றவில்லை. ஹெலேனா பிரித்தானியாவிற்குச் செல்வதற்கான உரிமையை அந்த நாடு மறுத்துவந்தது. அந்த முடிவு சட்டரீதியாகத் தவறானது என்றே ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வகையில் ஐரோப்பாவில் வசிக்கும் உரிமைபெற்ற எவரும் விசா இன்றி பிரித்தானியாவிற்குள் செல்லலாம்.ஐரோப்பிய நாடொன்றில் குடியுரிமையுடைய ஒருவர் பிரித்தானியாவில் வசிக்கும் போது இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்குச் சென்று தற்காலிகமாகத் தங்கியுள்ள ஒருவரை ஐந்து வருடங்களுக்குத் தனது பொறுப்பில் எடுத்துக்கொள்ளலாம். அகதி அனுமதி நிராகரிக்கப்பட்ட ஒருவரையோ, கற்கைக்கான அனுமதியில் வந்த ஒருவரையோ ஐரோப்பிய குடியுரிமை பெற்றவர் ஐந்து வருடங்களுக்கு வேலை செய்யும் அனுமதியுடன் தனது பொறுப்பில் எடுத்துக்கொள்ளலாம்.
ஐரோப்பிய குடியுரிமை கொண்ட ஒருவரின் உறவினர் ஐரோப்பியக் குடியுரிமை அற்றவராக இருந்தாலும் பிரித்தானிய செல்ல விசா தேவையில்லை: ஐரோப்பிய நீதிமன்றம்
Reviewed by NEWMANNAR
on
December 21, 2014
Rating:

No comments:
Post a Comment