2015ம் ஆண்டுக்கான நிதிக்கூற்று அறிக்கை வடமாகாண சபையில் ஏற்பு
2015 ம் ஆண்டுக்கான நிதிக்கூற்று அறிக்கை வடக்கு அவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண அவையின் 20வது அமர்வு கைதடியில் உள்ள மாகாண சபையின் கட்டடத் தொகுதியில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
அதன்போதே முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் சபையில் 2015ம் ஆண்டுக்கான நிதிக்கூற்று அறிக்கையினை முன்வைத்தார்.
அதனையடுத்து சபையில் நிதிக்கூற்று அறிக்கை உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மேலும் ஒதுக்கீட்டு முதலீட்டு நியதிச்சட்டம் அடுத்த அமர்வில் கொண்டு வருவதுடன் சபையில் ஏற்கப்படும் பட்சத்தில் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது அமைச்சரவை முடிவுகளை தங்களுக்கு தெரியப்படுத்துவதில்லை என்றும், வரவு செலவுத் திட்டம் தொடர்பில் உறுப்பினர்களது கருத்துக்களும் உள்வாங்கப்படவில்லை என்றும் பிரதி அவைத்தலைவரால் சபையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அத்துடன் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் உறுப்பினர்களது கருத்துக்களும் உள்வாங்கப்பட வேண்டும் இல்லையேல் எதிர்த்து வாக்களிப்போம் என்று உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.
மேலும் 2014ம் ஆண்டுக்கான குறை நிரப்பு ஒதுக்கீட்டுப் பிரேரணையும் சபையில் முதலமைச்சரால் கொண்டு வரப்பட்டு சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2015ம் ஆண்டுக்கான நிதிக்கூற்று அறிக்கை வடமாகாண சபையில் ஏற்பு
Reviewed by NEWMANNAR
on
December 04, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 04, 2014
Rating:


No comments:
Post a Comment