ஆளும் கட்சியிலிருந்து விலகிய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை; ஏ.எச்.எம் பௌசி
ஆளும் கட்சியிலிருந்து விலகிய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஏ.எச்.எம் பௌசி தெரிவித்துள்ளார். கட்சியின் மத்திய செயற்குழு நேற்று புதன்கிழமை கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஆறு பேர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலகிக்கொண்டனர்.இந்த உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மைத்திரிபால சிறிசேன இராஜித சேனாரட்ன இதுமிந்த திஸாநாயக்க, நவீன் திஸாநாயக்க, வசந்த சேனாநாயக்க மற்றும் பேசல ஜயரட்ன ஆகியோருக்கு எதிராக இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆளும் கட்சியிலிருந்து விலகிய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை; ஏ.எச்.எம் பௌசி
Reviewed by NEWMANNAR
on
December 04, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 04, 2014
Rating:


No comments:
Post a Comment