தமிழ் பேசும் சமூகத்தினர் தவறாமல் வாக்களிக்க வேண்டும் – மாவை சேனாதிராஜா
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் பேசும் சமூகத்தினர் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (18) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆராயும் இலங்கை தமிழரசுக் கட்சியின் கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய பல விடயங்கள் இதன்போது விவாதிக்கப்பட்டன
தமிழ் பேசும் சமூகத்தினர் தவறாமல் வாக்களிக்க வேண்டும் – மாவை சேனாதிராஜா
Reviewed by NEWMANNAR
on
December 20, 2014
Rating:

No comments:
Post a Comment