அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலைகளின் மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு


பாடசாலைகளின் மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன.

அடுத்த வருடத்திற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஆயினும் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதையிட்டு, ஜனவரி மாதம் 7அம், 8 ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களிலுள்ள 43 பாடசாலைகள் ஜனவரி 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்படும் என்றும் அமைச்சு கூறியுள்ளது.

பரிசுத்த பாப்பரசர் விஜயத்தின்போது பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ள பொலிஸார் மற்றும் முப்படையினரின் தங்குமிட வசதிகளுக்காக இந்த பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
பாடசாலைகளின் மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு Reviewed by NEWMANNAR on December 05, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.