அண்மைய செய்திகள்

recent
-

எம்.எச்.எம். அஸ்வரின் பதவி வெற்றிடத்திற்கு அமீர் அலி​யை நியமிக்கத் தீர்மானம் – ரிஷாட் பதியுதீன்


எம்.எச்.எம். அஸ்வரின் பதவி விலகல் காரணமாக வெற்றிடம் நிலவிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிக்கின்றார்.

பாராளுமன்ற உறுப்பினராக தமது கட்சியின் உறுப்பினரான அமீர் அலியை நியமிக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

இதன் பிரகாரம் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக, எதிர்வரும் 12 ஆம் திகதி அமீர் அலி பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறினார்.

ஜனாதிபதியை நாளை சந்தித்து, கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வு தொடர்பில் கலந்தாலோசித்து இறுதி முடிவை எடுக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எம்.எச்.எம். அஸ்வரின் பதவி வெற்றிடத்திற்கு அமீர் அலி​யை நியமிக்கத் தீர்மானம் – ரிஷாட் பதியுதீன் Reviewed by NEWMANNAR on December 05, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.