ஐ படம் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் ஜனவரி 9 ஆம் திகதி வெளியாகிறது
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமிஜாக்சன் நடித்த ‘ஐ’படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது.
இதன் பட வேலைகள் 2012லேயே தொடங்கப்பட்டிருந்தாலும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
திரையுலக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘ஐ’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இரண்டு நிமிடங்கள் வரையுள்ள இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, படத்தின் எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தியுள்ளது.
இந்நிலையில், நேற்று ‘ஐ’ படம் தணிக்கை செய்யப்பட்டு படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் வரிச்சலுகை கிடைக்காது என்பதால் படக்குழுவினர் மீள் பரிசீலனைக்காக செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது.
படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதால் யுஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதாக சென்சார் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளுக்கு மேல் ஒரே நேரத்தில் ஜனவரி 9 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
ஐ படம் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் ஜனவரி 9 ஆம் திகதி வெளியாகிறது
Reviewed by NEWMANNAR
on
December 21, 2014
Rating:

No comments:
Post a Comment