சொத்து விபரங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையாளர், வேட்பாளர்களுக்கு உத்தரவு
சொத்து விபரங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வேட்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக 18 வேட்பாளர்களின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களிடம் விசேட படிவமொன்று வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணத்தில் சொத்து விபரங்கள் பற்றிய விபரங்களை குறிப்பிட்டு மீளவும் தேர்தல் செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
நாளை காலை 9 மணி முதல் நண்பகல் வரையில் வேட்பு மனுக்களை தேர்தல் செயலகத்தில் தாக்கல் செய்ய முடியும்.
இ;வ்வாறு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் போது சொத்து விபரங்களையும் வேட்பாளர்கள் ஒப்படைக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
சொத்து விபரங்கள் ஒப்படைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சொத்து விபரங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையாளர், வேட்பாளர்களுக்கு உத்தரவு
Reviewed by NEWMANNAR
on
December 07, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 07, 2014
Rating:


No comments:
Post a Comment