மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பது ஏன்?; ரிசாட் பதியூதீன் விளக்கம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியூதீன், மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக இன்று அறிவித்துள்ளார்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலியும் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இதன்போது இணைந்து கொண்டமை குறிப்பிடக்கத்தது.
ஒரு குடும்பமாக வாழ வேண்டிய இந்த சிறிய நாட்டில், பிரிவினையை ஏற்படுத்தி, பிரச்சினைகளை உருவாக்கியமையை நீங்கள் அறிவீர்கள். அந்த சந்தர்ப்பத்தில் அமைச்சரவை அமைச்சர் என்ற விதத்தில், ஜனாதிபதிக்கும், குறிப்பிட்ட பாதுகாப்பு பிரிவினரும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாம் தெளிவுப்படுத்தியிருந்தோம். அதனை நிறுத்துமாறும் நாம் கோரிக்கை விடுத்தோம். இவ்வாறான தவறுகளை இழைக்கின்ற நபர்களுக்கு தண்டனையை வழங்குமாறும் நாம் கோரிக்கை விடுத்தோம். எனினும், எந்தவொரு நபருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. நிறுத்தப்படவும் இல்லை. அது தொடர்ச்சியாக அதிகரித்தது. மக்கள் அச்சப்பட ஆரம்பித்தனர். அளுத்கம சம்பவத்தை நீங்கள் அறிவீர்கள். அது திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு சம்பவமாகும். இவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுகின்றது, அதனை நிறுத்துமாறும் நாம் கோரினோம். அதற்கு அனைத்து இடங்களிலும் அனுமதி வழங்கப்பட்டது. உண்மையில் பெஷில் ராஜபக்ஸவிற்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். இந்த பிரச்சினை பெரிதுபடாத வகையில் பார்த்துக்கொண்டார். இரவு முழுவதும் அவரது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, அதனை நிறுத்தினார். இதனை நிறுத்துமாறு நாம் கோரிக்கை விடுத்த போதிலும், அது நிறுத்தப்படவில்லை.
எவ்வாறாயினும், கடந்தகாலங்களில் ரிஷாட் பதியூதீனினால் முன்னெடுக்கப்பட்ட சில விடயங்களால் மக்கள் மத்தியில் அவர் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தனிப்பட்ட வாழ்க்கையுடன் தலையிட்டமைக்கான காணொளிகள் இருந்தபோதிலும், தான் அதில் தலையிடவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மன்னார் மறை மாவட்ட ஆயர் தொடர்பில், அண்மையில் ரிசாஷ் பதியூதின் வெளியிட்ட சில கருத்துக்கள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இதேவேளை, மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு அச்சுறுத்தல் விடுத்து, கற் பிரயோகம் மேற்கொண்டதாகவும் அவர் மீது குற்றம் எழுப்பப்பட்டது.
அந்த பிரச்சினை இணக்கப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, அவர் நீதிமன்றத்திடம் மன்னிப்பு கோரியிருந்தார்.
வில்பத்து தேசிய சரணாலயத்தின் ஒரு பகுதி, அழிக்கப்பட்டு மக்களுக்கு வழங்குவதற்கு முயற்சித்தமை தொடர்பிலும், அவர் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பது ஏன்?; ரிசாட் பதியூதீன் விளக்கம்
Reviewed by NEWMANNAR
on
December 22, 2014
Rating:

No comments:
Post a Comment