”சபரிமலை யாத்திரை”யினை புனித யாத்திரையாக அங்கீகரித்தது இலங்கை அரசாங்கம்
சபரிமலை ஶ்ரீ ஐயப்ப சுவாமி பக்தர்களின் வருடாந்த விரத யாத்திரையினை புனித யாத்திரையாக அங்கீகரித்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரதியமைச்சர் பிரபா கணேசனிடம், ஐயப்பா சுவாமி பக்தர்கள் தமது சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அங்கீகரிக்க ஜனாதிபதியிடம் வேண்டுகோளை முன்வைக்குமாறு கோரியிருந்தனர்.
அதற்கமைய, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சபரிமலை யாத்திரையினை புனித யாத்திரையாக அங்கீகரித்துள்ளதாக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
”சபரிமலை யாத்திரை”யினை புனித யாத்திரையாக அங்கீகரித்தது இலங்கை அரசாங்கம்
Reviewed by NEWMANNAR
on
December 22, 2014
Rating:

No comments:
Post a Comment