காணாமற்போனோர் தொடர்பில் வவுனியாவில் சாட்சிப் பதிவுகள் நிறைவு
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வவுனியா மாவட்டத்திற்கான பகிரங்க சாட்சிப் பதிவுகள் இன்றுடன் நிறைவடைந்தன.
கடந்த 14 ஆம் திகதி முதல் செட்டிக்குளம் மற்றும் வவுனியா பிரதேச செயலகப் பிரிவுகளில் நான்கு நாட்களாக சாட்சி விசாரணைகள் இடம்பெற்றன.
ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்காக இன்று 60 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும், 33 பேர் மாத்திரமே சமூகமளித்திருந்ததாகவும், அவர்களிடம் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச தெரிவித்தார்.
இதேவேளை, இன்று புதிதாக 118 பேரின் முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் கூறினார்.
இதன் பிரகாரம் கடந்த நான்கு நாட்களாக வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான சாட்சி விசாரணைகளில் மொத்தம் 169 பேரிடம் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அத்துடன் புதிதாக 331 பேரிடம் இருந்து ஆணைக்குழு முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
காணாமற்போனோர் தொடர்பில் வவுனியாவில் சாட்சிப் பதிவுகள் நிறைவு
Reviewed by NEWMANNAR
on
December 18, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 18, 2014
Rating:


No comments:
Post a Comment