கொழும்பிற்கு ஆறு பிரதான வீதிகளிலிருந்து அதிசொகுசு பஸ் சேவைகள்
கொழும்பை அடையும் பிரதான ஆறு வீதிகளிலிருந்து அதிசொகுசு பஸ் சேவையை ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
இதற்காக 200 புதிய பஸ்களை இறக்குமதி செய்ய உள்ளதாக இலங்கை போக்குரவத்து சபையின் உப தலைவர் எல்.ஏ.விமலரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஊாடாக கொழும்பு நகரில் ஏற்படும் வாகன நெரிசலை குறைத்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கொழும்புக்கு வரும் அரச ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு சௌகரியமான பயணத்தை ஏற்படுத்திக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பிற்கு ஆறு பிரதான வீதிகளிலிருந்து அதிசொகுசு பஸ் சேவைகள்
Reviewed by NEWMANNAR
on
December 18, 2014
Rating:

No comments:
Post a Comment