28ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினம்
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக எதிர்வரும் 28 ஆம் திகதியை பிகரடனப்படுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.
ஒரு கோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 வாக்குச் சீட்டுகளை எதிர்வரும் 20ஆம் திகதி தபாலில் சேர்க்கவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாச தெரிவிக்கின்றார்.
மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் ஊடாக வாக்களார் அட்டைகள் தபாலில் சேர்க்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன் பின்னர் தபால் திணைக்களத்தினால் 25 மாவட்டங்களிலும் எதிர்வரும் 28ஆம் திகதி வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.
வாக்காளர் அட்டை விநியோகம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக இந்த திகதியின் பின்னர் தபால் திணைக்களத்தினால் வீடுவீடாக வாக்காளர் அட்டை விநியோகம் முன்னெடுக்கப்படமாட்டாது என்றும் அவர் கூறினார்.
28ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினம்
 Reviewed by NEWMANNAR
        on 
        
December 18, 2014
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
December 18, 2014
 
        Rating: 
       Reviewed by NEWMANNAR
        on 
        
December 18, 2014
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
December 18, 2014
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment