அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு மாகாணசபையின் 2015ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்திற்கென 272 மில்லியன் ரூபா நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது!

வடக்கு மாகாணசபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கென கோரப்பட்ட நிதியில் மத்திய அரசினால் 272 மில்லியன் ரூபா நிதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் மீதான குழு நிலை விவாத்தில் பங்குகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு செலவுகளுக்காக 1449.5 மில்லியன் ரூபா நிதி வழங்குமாறு வடக்கு மாகாணசபையால் கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்த போதிலும் 272 மில்லியன் ரூபா நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் கோரிய நிதி கிடைக்காத போதிலும் கோதா தேவைகளுக்காக நிதி ஒதுக்கீடு சேய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

வடக்கு மாகாணசபை இணக்க அரசியலில்! ஆளுநருக்கும் சமஅளவு நிதி!!

வடக்கு மாகாண சபை தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை செலவு செய்யவில்லையென்ற குற்றச்சாட்டுக்களின் மத்தியில் ஆளுநருடன் இணக்க அரசியலில் மாகாணசபை தயாராகியுள்ளது. கூட்டமைப்பு சார்பு வடமாகாணசபையின் இரண்டாவது வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும் புதன்கிழமை சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன்மீதான விவாதம் வெள்ளிக்கிழமை வரை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு - செலவுத் திட்டத்தின் பிரகாரம் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தேச தொகைகளின் விவரங்கள் வருமாறு: ஆளுநர் செயலகம் - 12 கோடியே 49 இலட்சத்து 19 ஆயிரம் ரூபா. முதலமைச்சர், அவரின் கீழான அமைச்சுக்கள் - 7 கோடியே 21 இலட்சத்து 17 ஆயிரம் ரூபா.

விவசாய அமைச்சு - 5 கோடியே 31 இலட்சத்து 32 ஆயிரம் ரூபா.
 கல்வி அமைச்சு - 21 கோடியே ஒரு இலட்சத்து 65 ஆயிரம் ரூபா. 
சுகாதார அமைச்சு - 5 கோடியே 93 இலட்சத்து 45 ஆயிரம் ரூபா. 
மீன்பிடி அமைச்சு - 7 கோடியே 52 இலட்சத்து 31 ஆயிரம் ரூபா. 
மாகாண சபை அலுவலகம் - 12 கோடியே ஒரு இலட்சத்து 64 ஆயிரம் ரூபா.

அத்துடன் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக 60 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதேசமயம் ஆளுநர் அலுவலகத்துக்கு ஒதுக்கப்பட்ட 12 கோடியே 49 இலட்சத்து 19 ஆயிரம் ரூபாவை விட மக்கள் பிரதிநிதிகளான 38 உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட பன்முக நிதித் தொகையை ஒத்த அதேயளவு நிதி ஆளுநருக்கும் முன்மொழியப்பட்டுள்ளது.

வடமாகாண வரவு-செலவு திட்டம் பாஸ்! அனந்தி மற்றும் சிவாஜி நடுநிலைமை!

வடக்கு மாகாண சபையின் இரண்டாவது வரவு- செலவுத் திட்டம் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் ஆளும் கட்சியின் உறுப்பினர்களான திருமதி அனந்தி சசிதரனும், எம்.கே.சிவாஜிலிங்கமும் நடுநிலை வகித்தனர்.
வடக்கு மாகாண சபையின் இரண்டாவது வரவு - செலவுத் திட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை முதலமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை வரை - தொடர்ச்சியாக மூன்று தினங்கள் சபை, குழு நிலை விவாதங்கள் இடம்பெற்றன. இந்நிலையில் அமைச்சுக்கள் தொடர்பான நிதி முன்மொழிவுகள் முடிவடைந்த நிலையில் இந்த வரவு - செலவுத் திட்டத்தைத் தாமும் ஏற்கின்றனர் எனத் தெரிவித்தனர். இதனால் வரவு - செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை.
ஆனால் இந்த வரவு - செலவுத் திட்டத்தில் ஆளுநர் செயலகத்துக்கும், ஆளுநருக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டமையால் தாம் ஆதரவளிக்காமல் நடுநிலைமை வகிக்கின்றனர் என ஆளும் கட்சியின் உறுப்பினர்களான திருமதி அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
வடக்கு மாகாணசபையின் 2015ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்திற்கென 272 மில்லியன் ரூபா நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது! Reviewed by NEWMANNAR on December 20, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.