வெளியானது மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனம் – தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுக்கூட இல்லை!
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால இன்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார். இதில் தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்தோ, தீர்வுத் திட்டம் குறித்தோ எந்த விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை. மைத்திரிபாலவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் '100 நாட்களுக்குள் புதிய தேசம்' என்ற மகுட வாக்கியத்துடன் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு-

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த நாட்டின் ஒரு பிரஜையை கூட சர்வதேச சக்திகள் துன்புறுத்துவதற்கோ அல்லது தொடுவதற்கோ நான் அனுமதிக்கமாட்டேன். 1994இலிருந்து நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதாக மக்களுக்கு உறுதியளித்து வந்துள்ள போதிலும், அதனை அரசமைப்பு ரீதியாக மேற்கொள்ள முடியவில்லை. நாடாளுமன்றத்திற்கு அதற்கான அதிகாரம் காணப்பட்ட போதிலும், அதனால் கடந்த 23 வருடங்களாக அதனை நிறைவேற்ற முடியவில்லை.
பிரதான கட்சியின் தலைவரான ஜனாதிபதியே அதற்கான தலைமைத்துவத்தை வழங்கவேண்டும். அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். இதற்காக ஜனாதிபதி முக்கிய அரசியல் கட்சிகளுடன் உடன்பாட்டிற்கு வரவேண்டும். இந்த பணியை நிறைவேற்றுவதற்காகவே நான் பொதுவேட்பாளராக போட்டியிட முன்வந்துள்ளேன். என்னால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினது ஆதரவைப் பெற முடியும். ஐக்கிய தேசிய கட்சி இதற்கான ஒப்பந்தமொன்றில் என்னுடன் கைச்சாத்திட்டுள்ளது. ஜே.வி.பி. 1994 ஆம் ஆண்டு முதல் எங்களுடைய கட்சியுடன் இது தொடர்பாக இணக்கப்பாட்டை கொண்டுள்ளது. ஜாதிக ஹெல உறுமயவும் இது தொடர்பான உடன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆகவே நான் இது குறித்து ஏனைய கட்சிகளுடன் ஆலோசித்து 100 நாள்களுக்குள் நிறைவேற்றுவேன்.
நிறைவேற்று அதிகார முறையை நீக்குவதற்கான ஆவணங்களாக மாதுளுவாவே சோபித தேரரின் நீதியான சமூகத்திற்கான இயக்கத்தால் முன்வைக்கப்பட்ட ஆவணங்களையும், அத்துரலிய ரத்தினதேரரின் தலைமையிலான குழுவால் முன்வைக்கப்பட்ட அரசமைப்பின் 19 திருத்தத்திற்கான யோசனைகளையும், ஐக்கிய தேசிய கட்சியால் முன்வைக்கப்பட்ட யோசனைகளையும் நான் பின்பற்றுவேன். புதிய முறையின் கீழ் நாடாளுமன்றமே முக்கியம்பெறும். ஜனாதிபதி நாட்டின் ஏனைய பிரஜைகளை போன்று சட்டத்தின் முன் சமமானவராகக் காணப்படுவார்.
சர்வஜன வாக்கெடுப்புடன் மாத்திரமே மாற்றப்படவேண்டிய அரசமைப்பு மாற்றங்களில் நான் கைவைக்கமாட்டேன். நாட்டின் இறைமை, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஊறுவிளைவிக்கக் கூடிய அரசமைப்பு மாற்றங்கள் எதனையும் செய்யமாட்டேன். நாட்டின் தேர்தல் முறையில் மாற்றங்கள் செய்யப்படும் அதேவேளை, நாட்டின் நல்லாட்சியை கண்காணிப்பதற்கான பொறிமுறை ஒன்றும் உருவாக்கப்படும். வெளிவிவகார கொள்கை 2009 இராணுவ வெற்றிக்குப் பின்னர் எமது வெளிவிவகாரக் கொள்கை முழுமையான குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை முழு உலகும் அறிந்த விடயம். முறையான வெளிவிவகார கொள்கை எம்மிடத்தில் இல்லாத அதேவேளை இராஜதந்திர செயற்பாடுகள் குறித்த அறிவும் திறமையும் உள்ளவர்கள் எமது இராஜதந்திர சேவைக்கு நியமிக்கப்படவில்லை.
அவர்கள் தமது கிராமங்களில் செயற்படுவது போன்று வெளிவிவகார செயற்பாடுகளை முன்னெடுக்க முயல்கின்றனர். இலஞ்சத்தையும், காடைத்தனத்தையும் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக இலங்கை குறித்த சர்வதே அபிப்பிராயத்தில் வீழ்ச்சியேற்பட்டுள்ளது, நாட்டை உடனடியாக இதிலிருந்து விடுவிக்கவேண்டும்.
இதற்காக தேசத்தின் கருத்திற்கேற்ப நாட்டின் வெளிவிவகார கொள்கை உருவாக்கப்படும். நூறு நாள்களுக்குள் வெளிவிவகார சேவைக்கு அரசியல் ரீதியாக நியமனம்பெற்ற அனைவரினது சேவையும் இரத்துச்செய்யப்படும். ஆசியாவின் முக்கிய நாடுகளுடன் சமமான உறவு ஏற்படுத்தப்படும். இந்தியாவின் பன்முகத் தன்மையை கருத்தில்கொண்டதாக எமது இந்திய கொள்கை அமைந்திருக்கும். இந்தியாவிடம் சார்ந்திருக்காத அதேவளை அதற்கு விரோதமற்ற கொள்கை பின்பற்றப்படும். பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த நாட்டின் ஒரு பிரஜையை கூட சர்வதேச சக்திகள் துன்புறுத்துவதற்கோ அல்லது தொடுவதற்கோ நான் அனுமதிக்கமாட்டேன்.என்று அமைந்துள்ளது.

Reviewed by NEWMANNAR
on
December 20, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment