அண்மைய செய்திகள்

recent
-

உயர்தர முடிவுகளின் படி முதலிடத்தைப் பிடித்த மாணவர்கள்

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகின.

இதில் அகில இலங்கை ரீதியாக விஞ்ஞான பிரிவில் மாத்தறை சுஜாதா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எச்.ஜீ.ஹிருணி உதாரா முதலாம் இடத்தைப் பிடித்துள்ளதோடு, மூன்றாம் இடத்தினை திருகோணமலையைச் சேர்ந்த சிவகுமார் இந்துஜன் பெற்றுக் கொண்டுள்ளார்.

மேலும் கணிதப் பிரிவில் யாழ் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த பாகியராஜ் தருகீசன் முதலிடத்தை வசப்படுத்தியுள்ளார்.

வர்த்தகப் பிரிவில் காலி சவுத்லண்ட் வித்தியாலயத்தின் பியூமி தனஞ்சனா முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
பாகியராஜ் தருகீசன்

மேலும் கலை பிரிவில் கொழும்பு விஷாகா பாலிகா மகா வித்தியாலயத்தின் நெத்சலா பதிரண முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

கிளிநொச்சி மத்திய கல்லூரி கணித,விஞ்ஞான பிரிவுகளில் மாவட்ட நிலையில் முதலிடம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் கிளி/மத்திய கல்லூரி மாணவர்கள் இருவர் கணிதப்பிரிவில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.
மாவட்ட நிலையில் கு.கதீஸ்(3ஏ) முதலாம் இடத்தையும் கா.சங்கீர்த்தனன் (2ஏ,பி) இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
அத்துடன் விஞ்ஞானப்பிரிவில் மாவட்ட நிலையில் முதலாமிடத்தை இதே பாடசாலை மாணவர் இராமமூர்த்தி ஜனத் (3ஏ) பெற்றுள்ளார்.
உயர்தர முடிவுகளின் படி முதலிடத்தைப் பிடித்த மாணவர்கள் Reviewed by NEWMANNAR on December 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.