வன்னி எம்.பி ஹீனைஸ் பாரூக்கின் கருத்தை கண்டித்தார் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்.
மன்னார் முசலியில் இடம் பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தர இருந்த எருக்கலம் பிட்டி மக்களை வடமாகாண சபை உறுப்பினர் அச்சுறுத்தி நிறுத்தினார் என பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் வெளியிட்டுள்ள செய்தியினை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,,,,
மன்னார் முசலி பகுதியில் இடம் பெற்ற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் அவர்களை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொள்ள இருந்த எருக்கலம் பிட்டி கிராம மக்களை அச்சுறுத்தி நிறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியை நான் மறுக்கின்றேன்.வன்மையாக கண்டிக்கின்றேன்.
அன்றைய தினம் குறித்த கிராமத்திற்கு நான் சென்றேன்.ஆனால் அந்த மக்களை நான் இடை மறிக்கவில்லை.
கோழைத்தனமாக செயற்படுவது றிப்கான் பதியுதீன் ஆகிய எனக்கு கிடையாது.
குறித்த நிகழ்விற்கு செல்ல விரும்புபவர்களை போகும்படி நான் கூறினேன்.
நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது.மைத்திபாலசிரி சேனாவாக இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஸவாக இருந்தாலும் எமக்கு ஒன்று தான்.
எனதும்,எமது மக்களின் உழைப்பின் காரணமாகவுமே உமது வெற்றி உறுதி செய்யப்பட்டது.
வாக்களித்த மக்களுக்கு செய்யும் மகத்தான துரோகமே இந்த மாற்றம்.
.jpg)
அவர்களுக்கு என்ன பதில் கூற முடியும்? ஒரு சில நூற்றுக்கனக்கான மக்கள் கலந்து கொண்ட நிகழ்வை ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட நிகழ்வு என தம்பட்டம் அடிப்பதா நியாயம்.ஹீனைஸ் பாரூக் எனக்கு பெரியவர் இல்லை.
மன்னாருக்குள் வர முடியாயமல் இருந்த அவரை மன்னாருக்குள் அழைத்து வந்தது நான்.எனவே வடமாகாண சபை உறுப்பினராகிய எனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள தவறான கருத்தை தான் வன்மையாக கண்டிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.
வன்னி எம்.பி ஹீனைஸ் பாரூக்கின் கருத்தை கண்டித்தார் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்.
Reviewed by NEWMANNAR
on
December 19, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment