அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நீலாஞ்சேனை கிராமத்திற்கான வீதியை அமைக்கும் பணியில் மன்னார் பொலிஸார்.(Photos)

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நீலாஞ்சேனை கிராமத்திற்கு செல்லும் பிரதான பாதை பல வருடங்கலாக போக்கு வரத்து செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றமையினால் அக்கிராம மக்களின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த வீதியை செப்பனிடும் பணியில் மன்னார் பொலிஸார் இன்று(18) வியாழக்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
 
-வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த ரொட்ரிகோ தலைமையில் குறித்த பணிகள் இடம் பெற்று வருகின்றது.
 
-மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் உள்ள உயிலங்குளம் சந்தியில் குறித்த நீலாஞ்சேனை கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதி காணப்படுகின்றது.குறித்த வீதியூடாக நீலாஞ்சேனை,அளப்பிட்டி,கூங்கன் தாழ்வு ஆகிய மூன்று கிராமத்தையும் சேர்ந்த நூற்றுக்கனக்கான மக்கள் பயணம் செய்வது வழமை.
 
-சுமார் 4 கிலோ மீற்றர் நீளம் கொண்ட குறித்த வீதி யுத்தத்தினால் கடுமையாக பாதீப்படைந்துள்ளது.குறித்த வீதிக்கு இரு மறுங்கிலும் பாறிய பற்றைகள் காணப்படுகின்றது.
 
-குறித்த வீதியை செப்பனிட்டு தருமாறு அக்கிராம மக்கள் மன்னார் பிரதேச சபை,அரசாங்க அதிபர்,பிரதேசச் செயலாளர்,அரசியல் வாதிகள் ஆகியோரிடம் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்தனர்.
 
ஆனால் எந்த அதிகாரிகளும் குறித்த வீதியை புனரமைத்துக் கொடுக்கவில்லை.யுத்தத்தினால் இடம் பெயர்ந்து மீண்டும் மீள் குடியேறி பல வருடங்களை கடக்கின்ற நிலையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி அக்கிராம மக்கள் குறித்த வீதியினால் பயணம் செய்து வந்துள்ளனர்.
 
-தற்போது மழைக்காலம் என்பதினால் குறித்த வீதியில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கின்றது.
 
-இந்த நிலையில் குறித்த கிராம மக்கள் மன்னார் பொலிஸாரிடம் முன் வைத்த கோரிக்கைக்கு அமைவாக மன்னார் பொலிஸார் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அனுமதியுடன் குறித்த வீதியை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த ரொட்ரிகோ அவர்களின் தலைமையில் மன்னார் பொலிஸ் நிலையத்ததைச் சேர்ந்த பொலிஸார்,அக்கிராம மக்கள்,சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள் ஆகியோர் இணைந்து குறித்த வீதியை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 பொலிஸார்.(photos)

(மன்னார் நிருபர்)
 
(18-12-2014)
 
மன்னார் நீலாஞ்சேனை கிராமத்திற்கான வீதியை அமைக்கும் பணியில் மன்னார் பொலிஸார்.(Photos) Reviewed by Admin on December 18, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.