றிசாட் கட்சி தாவியது சலுகைக்காக – பிரதியமைச்சர் அப்துல் காதர் குற்றச்சாட்டு!
“சலுகைகளுக்குப் பணிந்து – சமூகத்தை மறந்து சூழ்ச்சிக்காரர்களிடம் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் சரணடைந்திருக்கின்றனர். இவர்களுக்கு எதிர்வரும் 8ஆம் திகதி முஸ்லிம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். யார் கட்சி தாவினாலும் முஸ்லிம்கள் ஜனாதிபதியுடனேயே என்றும் இருப்பார்கள்.” – இப்படிக் கூறினார் பிரதியமைச்சர் அப்துல் காதர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:-
“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறியதால் அரசுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், முஸ்லிம்களை அபகீர்த்திக்குள்ளாக்கும் வகையில் ரிஷாத் முடிவெடுத்துள்ளார். அமீர் அலிக்கு எம்.பி. பதவியையும் வாங்கிக் கொண்டு அவர் அரசுக்கு துரோகமிழைத்துள்ளார். சமூகத்துக்காக அல்ல, தனிப்பட்ட சலுகைகளுக்காகவே எதிரணியிடம் அவர் சோரம் போனார்.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக மும்முரமாகச் செயற்படும் ஜாதிக ஹெல உறுமய அங்கம் வகிக்கும் எதிரணியில் எந்த அடிப்படையில் ரிஷாத் இணைந்துள்ளார். முஸ்லிம் விரோத சக்திகள் அங்கம் வகிக்கும் எதிரணிக் கூட்டணியில் இணைந்து அவர் சமூகத்துக்குத் தீங்கு விளைவித்துள்ளார். எது எப்படியிருந்தபோதிலும் நாட்டுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த ஜனாதிபதியை முஸ்லிம்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.
அவரின் வெற்றிக்கு இம்முறை பிரதான காரணகர்த்தாக்களாக இருப்பார்கள். அத்துடன், கடந்தமுறை 18 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஜனாதிபதி இம்முறை 28 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி” – என்றார்.
“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறியதால் அரசுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், முஸ்லிம்களை அபகீர்த்திக்குள்ளாக்கும் வகையில் ரிஷாத் முடிவெடுத்துள்ளார். அமீர் அலிக்கு எம்.பி. பதவியையும் வாங்கிக் கொண்டு அவர் அரசுக்கு துரோகமிழைத்துள்ளார். சமூகத்துக்காக அல்ல, தனிப்பட்ட சலுகைகளுக்காகவே எதிரணியிடம் அவர் சோரம் போனார்.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக மும்முரமாகச் செயற்படும் ஜாதிக ஹெல உறுமய அங்கம் வகிக்கும் எதிரணியில் எந்த அடிப்படையில் ரிஷாத் இணைந்துள்ளார். முஸ்லிம் விரோத சக்திகள் அங்கம் வகிக்கும் எதிரணிக் கூட்டணியில் இணைந்து அவர் சமூகத்துக்குத் தீங்கு விளைவித்துள்ளார். எது எப்படியிருந்தபோதிலும் நாட்டுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த ஜனாதிபதியை முஸ்லிம்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.அவரின் வெற்றிக்கு இம்முறை பிரதான காரணகர்த்தாக்களாக இருப்பார்கள். அத்துடன், கடந்தமுறை 18 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஜனாதிபதி இம்முறை 28 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி” – என்றார்.
றிசாட் கட்சி தாவியது சலுகைக்காக – பிரதியமைச்சர் அப்துல் காதர் குற்றச்சாட்டு!
Reviewed by NEWMANNAR
on
December 25, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 25, 2014
Rating:

No comments:
Post a Comment