மன்னாரில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகம் நாமல் ராஜபக்ஸ எம்.பியினால் திறந்துவைப்பு. Photos
மன்னார் டெலிகொம் பிரதான அலுவலகத்திற்கு முன்னால் இன்று புதன் கிழமை காலை சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மன்னார் மாவட்ட கிளைக்காரியாலயம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த அலுவலகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் புதல்வரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இன்று காலை 9.30 மணிக்கு குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மன்னாரின் பல பாகங்களில் இருந்தும் அதிகலவான மக்கள் வருகை தந்திருந்தனர்.
குறிப்பாக பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மீனவ கிராமங்களைச் சேர்ந்த அதிகலவான மீனவர்களும் வருகை தந்திருந்தனர்.
-இந்த நிலையில் மன்னார் வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உத்தியோக பூர்வமற்ற விஜயம் ஒன்றை மேற்கொண்டு மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்களை சந்தித்து உரையாடியுள்ளார்.
-இந்த நிலையில் நீண்ட நேரமாக மக்கள் கொட்டும் மழையிலும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மன்னார் அலுவலகம் முன் கூடி நின்றனர்.
-நீண்ட நேரத்தின் பின் மதியம் 12.20 மணியளவில் வந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறித்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.பின் சுமார் 2 நிமிடங்கள் வரை மாத்திரமே குறித்த அலுவலகத்தில் நின்றார்.
-அப்போது அவர் மக்கள் முன் உரையாற்றுகையில்,,,
-நான் எதிர்வரும் தேர்தல் இடம் பெறும் வரை இன்றும் மூன்று தடவைகள் மன்னாருக்கு வருவேண்.நான் இப்போது போகின்றேன்.நீங்கள் யாருக்கும் பயப்பிட தேவையில்லை.மஹிந்த ராஜபக்ஸவை வெற்றி பெறச்செய்யுங்கள்.உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வேண் என கூறி உடனடியாக அவர் அவ்விடத்தில் இருந்து சென்று விட்டார்.
-இதனால் அங்கு வந்த மக்கள் கோபமடைந்தனர்.தமது பிரச்சினைகளை கேட்பதற்கு கூட அவர் நிற்கவில்லை என கோபத்துடன் தெரிவித்த மக்கள் அந்த அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.
மன்னாரில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகம் நாமல் ராஜபக்ஸ எம்.பியினால் திறந்துவைப்பு. Photos
Reviewed by Admin
on
December 17, 2014
Rating:

No comments:
Post a Comment