அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தின் அவல நிலை-Photos

மன்னார் மாவட்டத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த,புகழ் பெற்ற மற்றும் மன்னார் மாவட்ட விளையாட்டுத்துறையின் வளர்ச்சியினை எடுத்துக் கூறும் ஒரே ஒரு விளையாட்டு மைதானம் மன்னார் தீவில் அமைந்துள்ள மன்னார் பொது விளையாட்டு மைதானமாகும்.

ஆனால் மன்னார் நகரசபையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள இந்த விளையாட்டு மைதானமானது இன்று மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்காக பாவிக்கப்பட்ட இவ் விளையாட்டு மைதானமானது, தற்பொழுது எந்த வொரு விளையாட்டுக்களையும் விளையாட முடியாத நிலைமையில் சேதமடைந்த காணப்படுகின்றது.

நகரசபையின் வருமானத்திற்காக கடந்தகாலங்களில் பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நத்தார்,புதுவருட பொதுச்சந்தைக்காக இவ் விளையாட்டு மைதானமானது வழங்கப்பட்டு இருந்தது.

அதன் பின்னர் மிகவும் சேதமைடைந்திருந்த நிலையில் இருந்த இவ்விளையாட்டு மைதானத்தினை பல அழுத்தங்களுக்கும்,நீண்ட நாட்களுக்கும் பின்னர் மீளவும் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.

அதே போன்று தற்பொழுதும் இவ்விளையாட்டு மைதானமானது மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது. இது தொடர்பாக பல தடவைகள் நகரசபையிடம் முறையிடப்பட்டுள்ளது.

மக்களின் பிரதிநிதிகள் என்கின்ற வகையில் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது நகரசபை உறுப்பினர்கள் மற்றும் நகரபிதா ஆகியோரின் கடமை.

மன்னார் பொது விளையாட்டு மைதானமானது மன்னார் மாவட்டத்தின் விளையாட்டுத்துறையினை தீர்மானிக்கும் விளையாட்டு மைதானமாக காணப்படுகின்றது.

எனவே இதற்கு எதிர்வரும் காலங்களில் முன்னுரிமை வழங்கி அபிவிருத்தி செய்ய வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மன்னார் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஏற்பாட்டில் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நடாத்தப்பட்டது.

எனினும் ஏற்பாட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்ட போதும் சிறிய தொகை பணமே செலவிடப்பட்டது.

-எனவே குறித்த விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்ய வேண்டிய பங்கு மன்னார் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர்களுக்கும் உள்ளதாக விளையாட்டு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.







செய்தி - எமது  நிருபர் 
படம் - Roxsan 
மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தின் அவல நிலை-Photos Reviewed by NEWMANNAR on January 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.