அண்மைய செய்திகள்

recent
-

இராமன் ஆண்டால் என்ன?இராவணன் ஆண்டால் என்ன? நான் தான் அமைச்சர் இது சில பச்சோந்தி அரசியல் வாதிகளின் தாரக மந்திரம்.மைக்கல் கொலின்.


இராமன் ஆண்டால் என்ன?இராவணன் ஆண்டால் என்ன? நான் தான் அமைச்சர் இது சில பச்சோந்தி அரசியல் வாதிகளின் தாரக மந்திரம்.நடந்து முடிந்த அரசியல் மாற்றம் அதனுடன் தொடர்புடைய ஆட்சி மாற்றம் என்பன ஒவ்வொரு தனிமனிதனையும் வெகுவாக மாற்றி உள்ளது என்பது மன்னார் நகர சபை உறுப்பினர்கள் மாறி மாறி தமக்குள் விட்டுக் கொள்ளும் அறிக்கைகளில் இருந்து அறியக் கூடியதாக உள்ளது.

வன்னி அமைச்சர் ஒருவர் தமிழ் முஸ்லீம் என்ற இன பாகுபாடு காட்டாது அனைத்து மக்களுக்கும் சேவையை வழங்கினார் என்று கூறுபவர்கள் ஒரு தடவை வரட்டும் உண்மை என்ன என்பதை ஆதாரங்களுடன் காட்டுகின்றேன். கடந்த அரசில் அரசியல் பழிவாங்கல்களும் அதிகார பழிவாங்கல்களும் நடந்ததா? இல்லையா? என்பதற்கு நானே ஒரு மிகப்பெரிய உதாரணம்.
ஒரு சமூகத்தில் உள்ள ஒரு சில புத்தி கெட்ட நல்லறிவில்லாத சிந்திக்க தெரியாத அப்பாவிகளை தூண்டி விட்டு அடி தடி அரசியல் செய்ததும் யாவரும் அறிந்ததே.

தொடர்பே இல்லதா பிரச்சினைக்காக எமது மக்களுக்கு மிகவும் யுத்தகாலத்தில் பாதுகாவலாக இருந்த நீதிமன்றத்தை அடித்து நொருக்கி அதன் புனிதத்தவத்தை கெடுத்தது யார்? அந்த துஸ்டர்களை கைது செய்து நீதி முன் கொண்டு வரும் போது தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வெளியில் எடுத்தது யார்? நீதி மன்றத்தில் கடமை நிமித்தம் நின்ற என்னை நீதிபதிக்கு குற்றவாளிகளை காட்டிக்கொடுத்தேன் என்று எனது பதவியை இல்லாமல் செய்தது யார்?
ஆளுனரின் பொம்மையாக ஆடிய பிரதம செயலாளருக்கு அமைச்சின் அடியால் செயலாளரினால் விடுக்கப்பட்ட அதட்டலில் எந்த கேள்வியும் இன்றி இடமாற்றம் வழங்கப்பட்டது ஏன்?

இதை ஏன் என்று கேட்க முடியாது உடனடியாக கடிதம் அனுப்பிய ஆணையாளர்கள் எத்தனை பேர்.

இவற்றை காரணம் காட்டி அமைச்சரின் சகோதரரிடம் மன்னிப்பு கோரி மீண்டும் இடமாற்றம் பெற ஆலோசனை கூறிய ஆணையாளருக்கு நடந்தது என்ன? இவற்றுக்கெல்லாம் பதில் உண்டு எல்லாம் ஆதாரத்துடன் என்னிடம் உள்ளது. இதைவிட இன்னும் எத்தனை பேர் பழிவாங்களுக்காக இடமாற்றப்பட்டனர் என்பதும் என்னிடம் உண்டு. விசாரனைகள் வரும் போது எல்லாம் வெளி வரும் இவரா? மக்களுக்கு நல்ல சேவையைசெய்தார்.

இதை விட எத்தனை கல்வி கற்ற இளைஞர் யுவதிகள் இருக்கும் போது எந்த வித தகுதியும் அற்ற தங்களுக்கு பிரச்சாரம் செய்த, நோட்டிஸ் ஒட்டிய எத்தனை பேருக்கு இந்த இரண்டு அமைச்சர்களாலும் சமூர்த்தி உத்தியோகம் வழங்கப்பட்டது. இவர்களினுடைய கோவைகளையும் சான்றிதழ்களையும் பார்வையிட்டால் உண்மை தெரியும்.

இனவாதம் மதவாதம் கதைக்கவில்லை உண்மையை ஒரு தடவை சொல்லியே ஆக வேண்டும் என்பதற்காக கூறுகிறேன்.
மன்னாரிலே வழங்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்களில் எத்தனை தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எத்தனை ஏனையவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உண்மையில் பாதிக்கப்பட்டது யார்? தரவு என்னிடம் உள்ளது. இதற்கும் சில அதிகாரிகள் உடந்தையாக இருந்தமை யாவரும் அறிந்ததே..

மன்னாரில் சில காணி அதிகாரிகளை வைத்துக்கொண்டு எத்தனை காணிகள் பொருத்தமில்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம். ஆகவே செய்த தவறுகளை உணர்ந்து இனிமேலாவது எந்த பாகுபாடும் இன்றி தங்களது அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டு நிற்கிறேன். அல்லது மகிந்த உதாரணம்.

ச.மைக்கல் கொலின்.
மன்னார் நகர சபையின் முன்னால் வேட்பாளர்
தமிழ் தேசியக்கூட்டமைப்பு
இராமன் ஆண்டால் என்ன?இராவணன் ஆண்டால் என்ன? நான் தான் அமைச்சர் இது சில பச்சோந்தி அரசியல் வாதிகளின் தாரக மந்திரம்.மைக்கல் கொலின். Reviewed by NEWMANNAR on January 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.